தமிழகத்தில் பிரியாமணி என்று சொன்னாலே ‘முத்தழகு’ கேரக்டர்தான் நினைவுக்கு வரும். அப்படியொரு நடிப்பைப் ‘பருத்திவீரன்’ படத்தில் காட்டியவர் பிரியாமணி. தற்போது முஸ்தபா ராஜை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகியிருக்கிறார். ஒரு மதிய வேளையில் அவரிடம் பேசினோம்.

Advertisement

ஐந்து வருடக் காதல். ஆர்பாட்டம் இல்லாத திருமணம். ஆடம்பரம் ஏதுமில்லாத மாமனார், மாமியார். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக நினைக்கிறேன். நானே படபடனு பேசிக்கிட்டே இருப்பேன். என்னைவிட அதிகமாக பேசக்கூடியவர் அவர். அன்பான கணவர்.

பிக் பாஸ்’ நிகழ்ச்சிக்கு உங்களைக் கூப்பிட்டாங்களாமே?

Advertisement

”தமிழ், கன்னடம் இரண்டு மொழிகளிலும் கூப்பிட்டாங்க. எனக்கு வர இஷ்டம் இல்லைனு சொல்லிட்டேன். இருபத்து நான்கு மணி நேரமும் நம்மைச் சுற்றி இருக்கும் கேமராக்கள் கண்காணிக்கிறதை நினைச்சாலே ஒரு மாதிரி இருக்கு. என்னால அப்படியெல்லாம் இருக்க முடியாது. எனக்குனு சுதந்திரம் தேவை. அந்த நிகழ்ச்சியில் அது கிடையாது. நூறு நாள்கள் அப்படியே இருக்கணும். சத்தியமா இருக்க முடியாது.

Advertisement

ஒரிஜினாலிட்டியை ஏன் மத்தவங்களுக்கு நான் காட்டணும்?! இரண்டு, மூன்று மணிநேரம் கெஸ்ட் மாதிரி உள்ளே போய் இருந்துட்டு வாங்கனு சொன்னா, அதுக்கு நான் ஓகே சொல்வேன். மத்தபடி, இதையெல்லாம் ஏத்துக்கிட்டு உள்ளே போய் இருக்கிறவங்களுக்குப் பெரிய சல்யூட். அது ரொம்பப் பெரிய விஷயம். அதுக்காகவே, அவங்களைப் பாராட்டணும்!”

Advertisement