நீங்க விரும்பும் A*** சும்மா அது மேல ஒக்காந்தா கிடைக்காது – ஜிம் ஒர்க் அவுட் புகைப்படத்திற்கு ரஷி கொடுத்த கேப்ஷன்.

0
5016
Rashi-Khanna

தற்போது உள்ள சினிமா துறையில் நடிகர்களுக்கு இணையாக நடிகைகளும் தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக பராமரித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரஷி கண்ணாவும் ஒருவர் தான். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் நடிகை ராசி கண்ணா. டெல்லியை பூர்விகமாக கொண்டவர் நடிகை ராசி கண்ணா. இவர் இந்தி சினிமாவில் தான் முதன் முதலில் அறிமுகமானர். அதாவது கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் கபே’ என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு வந்தார். இவர் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

இவர் தமிழ் சினிமாவிற்கு புதிது என்றாலும் தெலுங்கில் பல படங்களில் நடித்து உள்ளார். நடிகை ராசி கண்ணா அவர்கள் இமைக்கா நொடிகள் படத்தில் அதர்வாவின் காதலியாக தமிழில் அறிமுகமானார்.இந்த படத்தை தொடர்ந்து இவர் ஜெயம் ரவியின் அடங்க மறு, விஷாலுடன் அயோக்கியா, விஜய் சேதுபதியுடன் சங்கத்தமிழன் போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர்.

இதையும் பாருங்க : ஐடி கார்டு, ஹெட் செட், செக்கட் சர்ட் – மாஸ்டர் விஜய் லுக்கில் கவின். வைரலாகும் புகைப்படம்.

- Advertisement -

இவர் பெரும்பாலும் தெலுங்கு படங்களில் மட்டுமே தான் நடித்து வருகிறார். இங்கு நமக்கு நடிகை ஹன்சிகா எப்படியோ அதே போல் தெலுங்கில் ராசி கண்ணா. அதனால் நடிகை ராசி கண்ணா தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமா உலகில் நுழையும் போது நடிகை ராசி கண்ணா அவர்கள் பப்ளியாக கொஞ்சம் குண்டாக இருப்பார்.தற்போது தனது உடலை மிகவும் குறைத்து உள்ளார் நடிகை ராசி கண்ணா.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவது வழக்கம். அதே போல தனது உடல் அமைப்பை கண்ணும் கருத்துமாக பார்த்து வரும் ரஷி கடுமையான உடற் பயிற்சிகளையும் செய்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் இவர், உடற் பயிற்சி செய்துவிட்டு தனது எடுப்பான தோற்றத்தை புகைப்படமாக பதிவிட்டு, நீங்க விரும்பும் A*** சும்மா அது மேல ஒக்காந்தா கிடைக்காது என்று கேப்ஷனை கொடுத்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement