ஐடி கார்டு, ஹெட் செட், செக்கட் சர்ட் – மாஸ்டர் விஜய் லுக்கில் கவின். வைரலாகும் புகைப்படம்.

0
3863
kavin
- Advertisement -

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘மாஸ்டர்’ திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
ரசிகர்கள் எடிட் செய்த புகைப்படம்

மாஸ்டர் படத்தில் விஜய்யின் JD கதாபாத்திரத்தை விட விஜய் சேதுபதியின் பவானி கதாபாத்திரம் தான் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருந்தது. பலரும் மாஸ்டர் படம் விஜய் படம் இல்லை விஜய் சேதுபதி படம் என்று கிண்டலடித்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதியின் பல வசனங்கள் கைதட்டலை பெற்றது. அதிலும் குறிப்பாக ostrich பறவை முட்டை போடுவதோடுன் ஒப்பிட்டு விஜய் சேதுபதி சொன்ன வசனம் பல மீமாக வந்துகொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : அடேங்கப்பா, நடிகை கஸ்தூரிக்கு இவ்வளவு பெரிய மகளா ? அவரே பகிர்ந்த புகைப்படம்.

- Advertisement -

மேலும், திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வரும் இந்த திரைப்படம் சமீபத்தில் அமேசான் பிரைமில் வெளியாகி இருந்தது. அதிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாஸ்டர் படம் வெளியான போதே விஜய்யின் லுக் பெரிதும் பேசப்பட்டது. அதே போல விஜய்யின் சர்ட், காப்பு, ஹேர் ஸ்டைல் என்று பலவும் ட்ரெண்ட் ஆனது. அதே போல இவை அனைத்தும் படத்தில் மிகவும் ரசிக்கப்பட்டது.

இப்படி ஒரு நிலையில் நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான கவின் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிருக்கு சென்று இருந்தார். அதில் மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்து இருந்த சர்ட்டை போல ஒரு சர்ட்டை அணிந்ததோடு, அவரை போலவே கழுத்தில் ஐடி கார்ட், காதில் ஹெட் செட் என்று மாஸ்டர் பட லுக்கில் இருந்தார் கவின். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஆனால், இது ரசிகர்கள் எடிட் செய்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement