நடிகை ராதா மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்று இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் 90 காலகட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் ராதா. இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். இப்படி இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் கதாநாயகியாகவே நடத்தி இருக்கிறார்.
மேலும், 80, 90 காலகட்டத்தில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக ராதா திகழ்ந்தார். இவருடைய சகோதரி நடிகை அம்பிகாவும் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான். அதோடு ராதா அவர்கள் சிவாஜி, ரஜினி, கமல், பிரபு, சத்யராஜ் என பல உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடியாக நடித்து இருக்கிறார். இவர் நடிப்பு மட்டுமில்லாமல் நடனம், வசனம் என தனித்துவமான திறமையால் ரசிகர்கள் மத்தியில் கவர்ந்திருக்கிறார். இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
ராதா குடும்பம்:
பின் சினிமா பட வாய்ப்பு குறைய தொடங்கியவுடன் ராதா சின்னத்திரை பக்கம் சென்று விட்டார். சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார். இதனிடையே ராஜசேகரன் நாயர் என்பவரை ராதா திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கார்த்திகா, விக்னேஷ், துளசி என்று மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் மூத்த மகளான கார்த்திகா தெலுங்கில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ஜூஸ் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
கார்த்திகா நாயர் திரைப்பயணம்:
அதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்து இருந்தார். இருந்தாலும், இவருக்கு சொல்லிக் கொள்ளும்படி படவாய்ப்புகள் அமையவில்லை. இதனால் கார்த்திகா சினிமாவில் இருந்து விலகி விட்டார். பின் ராதாவின் இளைய மகள் துளசியும் நடிகையாக இருந்தார். இவர் 2013 ஆம் ஆண்டு புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்தினம் இயக்கிய ‘கடல்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
துளசி நாயர் குறித்த தகவல்:
அதுமட்டும் இல்லாமல் நடிகை துளசி நாயர் அந்த ஒரு படத்திலேயே மக்களிடையே பிரபலமாக பேசவும் பட்டார். அதனை தொடர்ந்து துளசி நாயர் அவர்கள் 2014 ஆம் ஆண்டு ரவி கே.சந்திரன் இயக்கிய ‘யான்’ படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. அதற்கு பின் துளசி நாயர் சினிமாவில் இருந்து விலகி படிப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
கார்த்திகா நாயர் நிச்சியதார்த்தம்:
இந்த நிலையில் நடிகை ராதாவின் மூத்த மகள் கார்த்திகா நாயருக்கு திருமண நிச்சியதார்த்தம் நடைபெற்று இருக்கிறது. இதுகுறித்து பதிவிட்டுள்ள ராதா ‘ “விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு எங்கள் பெண்ணைப் கொடுப்பது பற்றி பெருமைப்பட முடியாது. ஆனால் அவர்களின் மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். உனக்கு இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக என்னை அதிர்ஷ்டசாலி என்று நான் சொல்ல முடியாது.
ஆனால் திருமணம் என்பது இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். என் இதயம் இப்போது பல கலவையான உணர்வுகளுடன் இயங்குகிறது. ஆனால் அதிக அதிர்வு உங்கள் அன்பும் மகிழ்ச்சியும் மட்டுமே. எந்த தாயும் விரும்பும் ஒரு சிறந்த மகள் கர்து. நீ எங்கள் குடும்பத்திற்கு சிறந்த பரிசாக இருந்திருக்கிறாய். நீ எனக்கு அளித்த இந்த அற்புதமான அனுபவத்திற்கு நன்றி அன்பே என தெரிவித்துள்ளார்