சித்தி 2 சீரியலில் இருந்து விலகிய முக்கிய நடிகை – பிரியா விடை கொடுத்த சக நடிகர்கள். ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சி.

0
1508
chiti
- Advertisement -

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2 தொடர் திடீரென்று நிறுத்தப்பட்டகாக வெளியான செய்திக்கு நடிகை ராதிகா விளக்கமளித்துள்ளார். தென்னிந்திய சினிமா திரை உலகில் 1980 முதல் 1990 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ராதிகா சரத்குமார். ராதிகா அவர்கள் தமிழ் சினிமாவில் 80களில் இருந்து தொடங்கி இன்று வரை இடைவிடாமல் வெள்ளித்திரை, சின்னத்திரை என மாறி மாறி நடித்து வருகிறார். மேலும், சினிமா துறையில் தனக்கென ஒரு அடையாளத்தையும் உருவாக்கியவர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி கமல், விஜயகாந்த் என்று பல்வேறு நடிகர்களுடன் நடித்துவிட்டார் ராதிகா.

-விளம்பரம்-

இவர் பிரபல சன் தொலைக்காட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலை, வாணி ராணி,செல்வி, அரசி என பல்வேறு தொடர்களில் நடித்து வந்தார். கடைசியாக அவர் சந்திரகுமாரி என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். ஆனால் ராதிகாவிற்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்தி தந்தது சித்தி சீரியல் தான். இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டுமில்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான்.

இதையும் பாருங்க : ரோஜா பட BGM-ஐ இந்தியன் படத்தில் பாட்டாக போட்டுள்ளதை கண்டுபித்த இயக்குனர் – ஏ ஆர் ரஹ்மான் ரியாக்ஷனை பாருங்க. வைரல் வீடியோ.

- Advertisement -

கண்ணின் மணி கண்ணின்மணி என தொடங்கும் பாடலும் அனைத்து இல்லத்தரசியின் வீட்டையும் ஆக்கிரமித்து உள்ளது. இந்த சீரியலிலை ராதிகா சரத்குமார் அவர்களே தயாரித்து இருந்தார். அது மட்டும் இல்லாமல் முதல் முறையாக பட்டி தொட்டி எல்லாம் வெற்றி அடைந்த சீரியலும் இது தான். இன்னும் சொல்லப்போனால் சித்தி சீரியலுக்கு பிறகு தான் ராதிகா அவர்கள் மக்கள் மத்தியில் அதிகமாக பிரபலமானர். வெள்ளித்திரையில் சாதித்தவர்களால் சின்னத்திரையிலும் சாதிக்க முடியும் என்று நிரூபித்தவர் நடிகை ராதிகா சரத்குமார்.

தற்போது 22 வருடங்களுக்கு பிறகு “சித்தி 2” சீரியல் சன் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக போய்க் கொண்டு உள்ளது. இந்த சித்தி 2 சீரியலை கே.விஜயன் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ராதிகா, பொன்வண்ணன், ரூபினி, நிஷாந்தி (பானுப்பிரியாவின் தங்கை), டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து ராதிகா சரத்குமார் விலகி இருக்கிறார். ராதிகா விலகினாலும் இந்த சீரியல் தொடருமாம். ஆனால், ராதிகாவிற்கு பதில் யார் நடிக்கப்போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது.

-விளம்பரம்-
Advertisement