உலகம் முழுவதும் உள்ள புகழ் பெற்ற இசையமைப்பாளர்களில் ஏ ஆர் ரகுமான் அவர்களும் ஒருவர். இவரை இசைப்புயல் என்று தான் அனைவரும் அழைப்பார்கள். மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் தான் ஏ ஆர் ரகுமான் இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
ஏ ஆர் ரகுமான் அவர்கள் தன்னுடைய இசை திறமைக்காக பல்வேறு விருதுகளையும் வாங்கியுள்ளார். அதோடு ஒரே சமயத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்றவர்.ஏ ஆர் ரகுமான் ஆரம்ப காலத்தில் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணியாற்றியிருக்கிறார் ஆனால் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனது 1992 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா படத்தின் மூலம்தான் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம் தான்.
தனது முதல் படத்திலேயே சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதையும் ரோஜா திரைப்படத்தின் மூலம் பெற்றார் ஆர் ரகுமான்இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சியில் பயன்படுத்திய அதே இசையை இந்தியன் படத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ரகுமான். ஆம், ரோஜா படத்தில் பெண் பார்க்கும் காட்சி ஒன்று வரும் அதில் பின்னணியில் ஒரு இசையும் வரும்.
அந்த இசையை இந்தியன் படத்தில் வந்த டெலிபோன் மணி போல் பாடலில் இடையே வரும் சரணத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். நீங்களே அதை ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த விஷயம் சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன், ஏ ஆர் ரஹ்மானை லைவ் சாட்டிங்கில் பேட்டி கண்ட போது விக்னேஷ் சிவன் கேட்ட போது அதனை ஏ ஆர் ரஹ்மானே உறுதி செய்திருக்கிறார்.