மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் வேனு அரவிந்தின் நிலை குறித்து நடிகை ராதிகா தகவல் தெரிவித்துள்ளார். பிரபல சின்னத்திரை நடிகர் வேணு அரவிந்த் கோமா நிலைக்கு சென்றிருப்பதாகவும், அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கிய காதல் பகடை, காசளவு நேசம், காதல் வாங்கி வந்தேன் போன்ற பல்வேறு தொடர்களில் நடித்தவர் சீரியல் நடிகர் வேணு அரவிந்த். மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வி, வாணி ராணி, சந்திரகுமாரி ஆகிய நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.
சமீபத்தில் இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார். கொரோனா தொற்றில் இருந்து இவர் குணமடைந்த சில நாட்களிலேயே இவருக்கு நிமோனியா வந்துள்ளது. மேலும், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவருக்கு மூளையில் கட்டி இருப்பதை கண்டறிந்து உள்ளனர்.
இதையும் பாருங்க : திருமணத்தில் நான் செய்த தவறு இதான் – முதன் முறையாக வேதனையுடன் கூறிய ரேவதி.
இதை தொடர்ந்து அறுவை சிகிச்சை மூலம் அந்த கட்டியை அகற்றியுள்ளனர். கொரோனா தாக்குதலுக்குப் பின்பு நிமோனியா வந்ததாலும், மூளையில் இருந்த கட்டியை அறுவை சிகிச்சை செய்து அகற்றியதாலும் தற்போது வேணு கோமா நிலைக்கு போனதாக செய்திகள் வெளியானது. இதனை நீங்கள் கேட்ட பாடல் தொகுப்பாளர் விஜயசாரதி கூட உறுதிபடுத்தி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் வேனு அரவிந்தின் நிலை குறித்து நடிகை ராதிகா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது ‘வேனு அரவிந்த் கோமாவில் இருப்பதாக மீடியாக்களில் தவறான செய்திகளை வெளியிடுவது வேதனையாக இருக்கிறது. அவரின் உடல் நிலை குறித்து அவரது மனைவியிடம் கேட்டு அறிந்துகொண்டு வருகிறேன். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார் தற்போது தெறி இருக்கிறார். மிகவும் அருமையான மனிதர், அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள். தவறான செய்திகளை பரப்ப வேண்டாம்’ என்று பதிவிட்டுள்ளார்.