கருத்தம்மா பட நடிகையா இது.? எப்படி இருக்காங்க பாருங்க.! போட்டோ இதோ

0
2852
karuthamma
- Advertisement -

நான் பிறந்தது ஹைதராபாத் சிட்டி. ஒன்பது வயசுல இருந்து தமிழ் சினிமாவுல இருக்கேன். பலரும் நான் `கருத்தம்மா’ படத்துலதான் அறிமுகம் ஆனேன்னு தப்பா நினைச்சுக்கிட்டு இருக்காங்க. அதுக்கு முன்னாடியே நான் சினிமாவுல இருக்கேன்!” – தன் `அப்போ இப்போ’கதையைச் சொல்லத் தொடங்குகிறார், நடிகை ராஜாஶ்ரீ. 

-விளம்பரம்-

Rajasree

- Advertisement -

கன்னடப் படத்துலதான், நான் முதல் முதல்ல ஹீரோயினா அறிமுகம் ஆனேன். கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் பையனோட அமைஞ்சது. இரண்டாவது படம் தமிழில், `கருத்தம்மா’. கன்னடப் படத்துல நடிச்சு முடிச்ச சமயத்துல டைரக்டர் பாரதிராஜா சாரோட மேக்கப்மேன் ஒருத்தர், `பாரதிராஜா சார் அவரோட அடுத்த படத்துக்காக நடிகையைத் தேடிக்கிட்டு இருக்கார்’னு அப்பாகிட்ட சொன்னார். அப்பா என்னைக் கூட்டிக்கிட்டு போய், பாரதிராஜா சார்கிட்ட அறிமுகப்படுத்தி வெச்சர். அவர், தமிழில் பெரிய இயக்குநர்னு அப்போ எனக்குத் தெரியாது. என்னை உற்றுப் பார்த்துட்டு, கையில சில டயலாக் பேப்பர்ஸ் கொடுத்துப் படிக்கச் சொன்னார், படிச்சேன். மேக்கப் டெஸ்ட் எடுத்தார். `கருத்தம்மா’ கேரக்டருக்கு நான் ஓகேவா இருப்பேன்னு அவருக்குத் தெரிஞ்சது. என்னைப் படத்துல கமிட் பண்ணிட்டார்.

சினிமாவுல கொஞ்சம் இடைவெளி கொடுத்துட்டு சீரியல்ல நடிச்சுக்கிட்டு இருக்கும்போதுதான், இயக்குநர் பாலா சாரை சந்திச்சேன். `சேது’ படத்துக்காக என்கிட்ட பேசினார். அப்போ நான் டிவி சீரியல்ல பிஸியா இருந்தேன். முதல்ல கால்ஷீட் இல்லைனு மறுத்தேன். `சேது’ படத்தோட முழுக் கதையையும் பாலா சார் என்கிட்ட சொன்னார். என்னைத்தவிர, அந்தப் படத்தோட கதை வேறு நடிகர்களுக்குத் தெரியாது.

-விளம்பரம்-

படத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண் கதாபாத்திரத்தில் நடிக்கக் கேட்டார். `இந்த கேரக்டர் உங்களுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுக்கும்’னு சமாதானப்படுத்தி, நடிக்க வெச்சார். சொன்ன மாதிரியே, அந்த கேரக்டர் எனக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்தது.” என்றவர், தொடர்ந்தார்.

திருமணத்துக்குப் பிறகு, சினிமாவுல நடிக்க அவ்வளவா ஆர்வமில்லை. 99 சதவிகிதம் நான் குடும்பத்துக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பேன். மீதி இருக்கிற ஒரு சதவிகிதம்தான் சினிமா. எனக்கு ஒரு பொண்ணு இருக்கா, பெயர் தன்வி. மூணாங் கிளாஸ் படிக்கிறா… அவகூட நேரம் செலவழிக்கிறதுதான் இப்போ நான் பண்ணிக்கிட்டு இருக்கிற ஒரே வேலை!” என்கிறார், ராஜாஶ்ரீ.

Advertisement