‘நான் பதினெட்டு வயசிலயே மாடலிங் பண்ண ஆரம்பிச்சிட்டேன். அதைப் பார்த்திட்டு வந்த வாய்ப்புதான் `கில்லி’னு ஒரு கன்னடப் பட வாய்ப்பு. அது `7ஜி ரெயின்போ காலனி’ படத்துடைய ரீமேக்.
அந்தப் படத்தை ரெஃபரன்ஸுக்குப் பார்த்தபோதுதான், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு ஒவ்வொரு ரீஜனுக்கும் ஒரு சினிமா இருக்குன்னே தெரிஞ்சது. படிச்சது ஆர்மி ஸ்கூல்ங்கறதால, சினிமா அவ்வளவா தெரியாது. சௌத் இந்தியன் சினிமான்னா ஒரு இன்டஸ்ரினுதான் நினைச்சிட்டிருந்தேன்.

மறுத்ததுக்குக் காரணம் என்ன தெரியுமா? நீங்க சொன்னா நம்பவே மாட்டீங்க, அவங்க எனக்குக் கால் பண்ணி “நாங்க உங்களுடைய டேட் ஆஃப் பெர்த் பார்த்தோம். அதை வெச்சுப் பார்க்கும் போது, நீங்க வருங்காலத்தில் பெரிய நடிகையா வருவீங்கனு தெரிஞ்சது. அதனால நீங்க இந்தப் படத்தில் நடிக்கணும்னு விரும்பறோம்”னு சொன்னாங்க.
எனக்கு ஒண்ணுமே புரியல. நான் வேணாம்னு சொல்லிட்டேன். ஆனா, அவங்க எங்க வீட்ல எல்லாம் பேசி, `7ஜி ரெயின்போ காலனி’ பட சீடி அனுப்பி வெச்சாங்க.

Advertisement

நான் படத்துடைய க்ளைமாக்ஸ் பார்த்திட்டு பயங்கரமா அழுது, நான் அந்த க்ளைமாக்ஸ் பண்ணவே மாட்டேன்னு அடம்பிடிச்சேன். அப்புறம் சமாதனப்படுத்தினாங்க. ஆனா, எனக்கு ஒரு ஐடியா, நாம ஏன் சினிமால வர்ற காசை பாக்கெட் மணியா வெச்சுக்கக் கூடாதுன்னு தோணுச்சு. `தடையற தாக்க’ படத்தில் நடிச்சதும் அப்படித்தான். அதில் நான் ரொம்ப சின்ன ரோல்.
ஆனா, அப்போ எனக்கு படத்துடைய இயக்குநர் யாரு நடிகர் யாருனு எந்த ஐடியாவும் இல்ல. அப்படி ஆரம்பிச்ச ட்ராவல், இப்போ நிஜமாவே ஒரு நடிகையா வளர்ந்திருக்கேன்னு நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு.”

Advertisement