தென்னிந்திய சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை ரகுல் பிரித் சிங். நடிகை ரகுல் பிரீத் சிங் அவர்கள் தன்னுடைய 18 வயதிலேயே மாடலிங் செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். அதற்குப் பின்னர் சினிமாத் துறையில் படங்களில் நடிக்க தொடங்கினார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தான் தமிழ் மொழியில் அறிமுகம் ஆனார். இவர் தமிழில் தீரன், ஸ்பைடர்,தேவ் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார். இந்நிலையில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்க்கு தற்போது படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.
இதுகுறித்து சமீபத்தில் அவர் பேட்டியில் கூறியது, நான் படங்களில் தொடர்ந்து கவர்ச்சியாக நடித்து தவறு செய்து விட்டேன். அந்த தவறு இப்போது தான் எனக்கு புரிகிறது. தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் எனக்கு பிரச்சனை கொடுத்ததில்லை. சம்பள விஷயத்தில் விட்டுக்கொடுத்து யாருடனும் தகராறு செய்வதில்லை. மேலும், படப்பிடிப்பிற்கு நான் குறித்த நேரத்திற்கு சென்று விடுவேன். இவ்வளவு இறங்கியும் கூட எனக்கு பட வாய்ப்புகள் வரவில்லை. அதற்கு காரணம் நான் கவர்ச்சியாக நடித்தது தான். நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களில் நடிக்காமல் கவர்ச்சியாக நடித்து விட்டேன். அதனால் தான் படங்கள் குறைந்து விட்டன. இப்போது நான் சைவ உணவிற்கு மாறி விட்டேன்.
இதையும் பாருங்க :வாழ்த்துக்கள்,கொரோனா வந்துடிச்சி. டிக் டாக்கில் வீடியோ வெளியிட்ட நடிகை சார்மி.
தன் வாழ்வில் எடுத்திலேயே இது தான் சிறந்த முடிவு. நான் ஒரு தீவிரமான அசைவ விரும்பி. எனக்கு காய்கறிகள் சாப்பிடுவது பிடிக்காமல் இருந்தது. என்னுடைய வாழ்வில் இறைச்சி ஒரு முக்கியமாக இருந்தது. குறிப்பாக முட்டை சொல்லலாம். இருந்தாலும் நான் முற்றிலும் சைவ உணவிற்கு மாற முடிவு செய்தேன். இது திடீரென்று எடுக்கப்பட்ட முடிவல்ல. இப்போது நான் உடல் எடை குறைந்தும், ஆரோக்கியமாகவும், ஆற்றலுடனும் இருப்பதாக உணருகிறேன். ஷூட்டிங்காக நான் பல இடங்களுக்கு செல்ல வேண்டி இருப்பதால் எல்லா இடங்களிலும் சைவ உணவு கிடைக்கிறதா? என்பது கேள்வி தான்.
அதனால் தான் நான் வீட்டில் இருந்தே காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதற்கு எடுத்துச் செல்வேன். நான் சைவத்துக்கு மாறி கடுமையாக கடைபிடித்து வருகிறேன். என்னுடைய குழுவில் யாருக்கு சைவ உணவு கிடைத்தாலும் எனக்கு கொடுக்கிறார்கள் என்று கூறியிருந்தார். தற்போது ராகுல் பிரீத் சிங் அவர்கள் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அயலான் படத்திலும் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஹிந்தியில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார்.