கல்யாண வாழ்க்கையில் பிரச்சனை, விவாகரத்து வாங்குகிறீர்களா? சர்ச்சைகளுக்கு நடிகை ரம்பா கொடுத்த பதிலடி

0
191
- Advertisement -

தன்னுடைய விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு நடிகை ரம்பா அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இடுப்பழகி சிம்ரன், புன்னகை அரசி சினேகா என்று பலருக்கும் பட்டம் இருப்பது போல் தொடையழகி என்ற வித்தியாசமான பட்டத்துடன் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் வித்தியாசமான ரம்பா. இவர் 1993 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘உழவன்’ என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

-விளம்பரம்-

அதற்குப் பிறகு ‘உள்ளத்தை அள்ளித்தா’ என்ற படத்தில் கார்த்திக்குடன் ஹீரோயின் ஆக ரம்பா நடித்திருந்தார். ஹீரோயினாக களம் இறங்கிய முதல் படத்திலேயே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார் ரம்பா. அதனைத் தொடர்ந்து ராசி, விஐபி, நினைத்தேன் வந்தாய், என்றென்றும் காதல், பூமகள் ஊர்வலம், ஆனந்தம் உட்பட பல ஹிட் படங்களில் நடித்து இருந்தார். இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம்,கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்திருந்தார்.

- Advertisement -

ரம்பா திருமணம்:

இதனிடையே நடிகை ரம்பா கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திரகுமார் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பின் ரம்பா சினிமாவில் இருந்து விலகி விட்டார். தன்னுடைய குடும்பம், குழந்தைகள், கணவர் பிசினஸ் என்று பிசியாக இருக்கிறார்கள். மேலும், இவர்களுக்கு சொந்தமாக மேஜிக் குழந்தைகள் என்ற நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.

ரம்பா குறித்த செய்தி:

சமீபத்தில் தான் இந்த நிறுவனத்தின் இரண்டாவது கிளையை கோவையில் உள்ள சிங்காநல்லூர் அருகே திருச்சி சாலையில் திறந்து வைத்தார்கள். இதை அடுத்து 30-க்கும் மேற்பட்ட கிளைகளை இந்தியா முழுவதும் திறக்க திட்டமிட்டு இருப்பதாக பேட்டியில் ரம்பா கூறி இருந்தார். இது ஒரு பக்கம் இருக்க, இடையில் நடிகை ரம்பா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்திற்கு சென்றதாக நிறைய செய்திகள் வந்து இருந்தது. அதோடு இவர்கள் பிரிந்து விட்டார்கள் என்று கூட சொன்னார்கள்.

-விளம்பரம்-

ரம்பா பேட்டி:

இந்த நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் ரம்பா, நானும் என்னுடைய கணவரும் எங்கள் குழந்தைகளுடன் ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்திற்கு போனதெல்லாம் வந்த செய்திகள் எல்லாமே வதந்திகள் தான். நானும் என் கணவரும் ஒன்றாக தான் எங்கள் வாழ்கிறோம். திருமணத்திற்கு பிறகு நான் நடிக்கவில்லை. குழந்தைகளை கவனித்துக் கொள்வது, கணவருடன் பிசினஸுக்கு உதவி செய்வது என்று என்னுடைய வாழ்க்கை போய்க் கொண்டிருக்கிறது.

சர்ச்சைகளுக்கு கொடுத்த பதில்:

சினிமாவில் ரொம்ப பிசியாக பல மொழிகளில் ஹீரோயினியாக நடித்துக் கொண்டிருக்கும் போது என்னுடைய மனது அமைதியான ஒரு வாழ்க்கைக்கு தான் ஏங்கி இருந்தது. குடும்பம், குழந்தைகள் என்று சீக்கிரமாக செட்டில் ஆகணும் என்று ஆசைப்பட்டேன். நான் ஆசைப்பட்டது போலவே அன்பான கணவர், முத்து முத்தாக மூன்று பிள்ளைகள். இப்ப நான் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். கடவுளுக்கு தான் நன்றி என்று பேசி இருக்கிறார்.

Advertisement