நடிகை ரம்யாகிருஷ்ணனின் மகனா இது.! என்ன இப்படி வளர்ந்துட்டார்.! நீங்களே பாருங்க.!

0
10388
Ramyakrishnan
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை ரம்யாகிருஷ்ணன், 1970 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். தனது 14 வயதில் ‘பலே மித்ருலு ‘ என்ற தெலுகு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுமானார். இதுவரை 200 மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஒரு புகழ் பெற்ற நடிகை.

-விளம்பரம்-
ritvik

தெலுங்கில் தனது சினிமா பயணத்தை தொடங்கிய நடிகை ரம்யாகிருஷ்னன், தமிழில் அறிமுகமான படம் 1983 ஆம் ‘வெள்ளை மனசு’ என்ற படத்தில் தான். அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ரஜினி நடித்த ‘படிக்காதவன்’ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் 1991 ஆம் ஆண்டு விஜயகாந்த நடித்த ‘கேப்டன் பிரபாகரன் படத்தில் ‘ வந்த ஆட்டமா தேரோட்டமா என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார்.

இதையும் பாருங்க : சிறையில் லாஸ்லியா மற்றும் அபி செய்த செயல்.! முகம் சுழித்த தர்ஷன், முகென்.! அதிலும் லாஸ்லியா டிரஸ் பாத்திங்களா.! 

- Advertisement -

அதன் பின்னர் தெலுகு, கன்னடம், மலையாளம் என்று பன்மொழி படஙகளில் நடித்து வந்தார் ரம்யாகிருஷ்னன். ஆனால், பெரிய ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு இவர்க்கு அமையவில்லை. இவருக்கு ஒரு நல்ல திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 1999 ஆம் சூப்பர் ஸ்டார் நடித்த படையப்பா தான். அந்த படத்திற்கு பின்னர் இவரது மார்க்கெட் எகிறியது. அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த நடிகை ரம்யாகிருஷ்ணன் தனது 33 ஆம் வயதில் திருமணம் செய்து கொண்டார்.

ritwik-son
Ramya-Krishnan-walks-the-ramp-with-her-son

2003 ஆண்டு கிருஷ்ணா வம்சி என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவருக்கு, ரித்விக் என்ற மகனும் பிறந்தார். பொதுவாக ரம்யாகிருஷ்ணன் அவரது மகனை பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைத்து வருவது இல்லை. தற்போது அவரது மகனை நீங்கள் பார்த்தல், 50 வயதை நெருங்கும் ரம்யாகிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று ஆச்சர்யப்பட்டு தான் போவீர்கள்.

-விளம்பரம்-
Advertisement