நடிகை ரஞ்சினி 1970ஆம் ஆண்டு சிங்கப்பூரில் பிறந்தவர். இவரது உண்மையான பெயர் ஷாஷா செல்வராஜ். அப்பா பெயர் ஷாஷா, அம்மா பெயர் லில்லி. இவரது குடும்பம் திருநெல்வேலியில் இருந்து சிங்கப்பூர் சென்று செட்டில் ஆன குடும்பம் ஆகும்.

Advertisement

ரஞ்ஜினியின் அப்பா செல்வராஜ் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஆவார். இதன் காரணமாக தனது மகளை 15 வயதில் பாரதிராஜாவின் படத்தில் அறிமுகம் செய்தார். சிங்கப்பூரில் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போது பாரதிராஜாவிடம் இருந்து அழைப்பு வர, உடனேயே படிப்பினை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்தனர் ரஞ்சனியின் குடும்பத்தினர்.

இரண்டு வாரத்தில் சூட்டிங் முடிந்து சென்றுவிடலாம் என பார்த்தால், ரஞ்சனிக்கு இன்னும் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட ரஞ்சனி அதன்பின்னர் மலையாள படங்களில் அதிகமாக நடித்தார்.

Advertisement

Advertisement

தமிழில், முதல் மரியாதை படத்தில் அறிமுகம் ஆகி, அதன்பின்னர்

அவளை சொல்லி குற்றமில்லை
கடலோர கவிதைகள்
குடும்பம் ஒரு கோவில்
ஆயுசு நூறு
முத்துக்கள் மூன்று
பரிசம் போட்டாச்சு
பாசம் ஒரு வேஷம்
புது மாப்பிள்ளை
தாய்மேல் ஆணை
உரிமை கீதம்
கல்யாண ராசி

உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்தார். தமிழ் மற்றும் மலையாளத்தில் மொத்தம் 50கும் மேற்ப்பட்ட படங்களில் நடித்தார் ரஞ்சினி.

1991ஆம் ஆண்டு ஈழத்தமிழர் நாதன் என்னும் பிஸ்னஸ் மேனை திருமணம் செய்துகொண்டு லண்டனில் சென்று செட்டில் ஆனார் ரஞ்சினி. இந்த நேரத்தில் பி.பி.சி தொலைக்காட்சியில் வேலை செய்தார்.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக நாதனை பிரிந்து விவாகரத்து பெற்று மீண்டும் இந்தியா வந்தார். ரஞ்சனி ஒரு சட்டம் படித்த வழக்கறிஞர் ஆவார். இந்தியா வந்த ரஞ்சனி கொச்சினில் உள்ள ஒரு கல்லூரியில் கல்லூரி இயக்குனராக வேலை செய்து வருகிறார். மேலும், கேரளாவில் பியரி கொம்பாரா என்னும் ஒரு தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். 47 வயதான இவருக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை.

Advertisement