‘அதன் ஒத்திகை வீடியோவை பார்க்கும் போது’ – ‘புஷ்பா 2’ பீலிங்ஸ் பாடல் குறித்து ரஷ்மிகா சொன்னது

0
353
- Advertisement -

‘புஷ்பா 2’ பீலீங்ஸ் பாடல் குறித்து நடிகை ராஷ்மிகா கூறியிருக்கும் விஷயம்தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கு சினிமா வட்டாரத்தில் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கி கொண்டு இருப்பவர் அல்லு அர்ஜுன். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல படங்கள் பெற்று இருக்கிறது. அந்த வகையில் , கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி இருந்த படம் புஷ்பா. இந்தப் படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

மேலும், இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில், சுனில் அனுசியா உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். ஆந்திர மாநிலம் வனப்பகுதியில் நடைபெறும் செம்மர கடத்தலை மையமாக வைத்து இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

- Advertisement -

புஷ்பா 2 :

அதனைத் தொடர்ந்து , இதே படக்குழுவுடன் புஷ்பா 2: தி ரூல் படம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்படம் கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி உலகம் முழுவதும் 3000 திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமரசங்களை பெறுவதோடு, வசூல் சாதனையும் செய்து வருகிறது. உலக அளவில் இப்படம் தற்போது வரை ரூபாய் 1600 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்து இருக்கிறது. இப்படத்தில் அல்லு அர்ஜுனின் நடிப்பும், ராஷ்மிகாவின் அழகும் இளைஞர்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

புஷ்பா 2 பாடல்கள்:

‘புஷ்பா 1’ படம் ஹிட்டானதற்கு முக்கியமான காரணமாக இருந்தது அந்த படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் என்றே தான் சொல்ல வேண்டும். அதேபோல் புஷ்பா 2 படத்தில் இடம்பெற்றிருக்கும் பாடல்களும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக ‘பீலிங்ஸ்’ பாடலில் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்விகா இடையேயான கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருக்கிறது. ஆனால், இந்தப் பாடல் படப்பிடிப்பின் போது தான் சங்கடமாக உணர்ந்ததாக ராஷ்மிகா கூறியிருக்கிறார்.

-விளம்பரம்-

பீலிங்ஸ் பாடல் குறித்து ராஷ்மிகா:

அதில், ‘பீலிங்ஸ்’ பாடலின் ஒத்திகை வீடியோவைப் பார்த்தபோது நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன். அல்லு அர்ஜுனுடன் இணைந்து நடனமாடியதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், யாராவது என்னை தூக்கினால் எனக்கு பயமாக இருக்கும். இந்தப் பாடலில் அல்லு அர்ஜுன் என்னை தூக்கி நடனம் ஆடும் காட்சியில் முதலில் சங்கடமாக உணர்ந்தேன். ஆனால், அல்லு அர்ஜுன் மற்றும் சுகுமார் சார் அந்த சங்கடத்திலிருந்து என்னை விடுவித்தனர். அவரை நம்பிய பிறகு அது அவ்வளவு சங்கடமாக தெரியவில்லை, படப்பிடிப்பு மகிழ்ச்சியாக நடந்தது என்று கூறியிருக்கிறார்.

புஷ்பா 2 சர்ச்சைகள்:

மேலும், புஷ்பா 2 படம் மக்களால் எவ்வளவு கொண்டாடப்பட்டு வருகிறதோ அந்த அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பிரிவியூ ஷோவின் போது அல்லு அர்ஜுனை காண வந்த ரசிகை ஒருவர் கூட்ட நெரிசலில் இறந்தது தான் இந்த தொடரும் சர்ச்சைகளுக்கு காரணமாகும். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் கொடுத்த புகாரின் பெயரில் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின் சில மணி நேரங்களில் ஜாமினில் வெளியே வந்தார். தற்போது வரை அல்லு அர்ஜுன் இடம் காவல்துறை விசாரணை நடத்திக் கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement