திருமணத்தால் பறிபோன வாழ்க்கை – கரியர் மூலமாக மீட்டெடுத்தேன் – நடிகை ரிஹானா நெகிழ்ச்சி

0
113
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து கதையை எடுக்கிறார்கள். முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

-விளம்பரம்-

பாண்டியனுக்கு பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், இந்த சீரியலில் மாரி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை ரிஹானா. இவர் சின்னத்திரை சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார். இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இருந்து திடீரென்று விலகி விட்டார்.

- Advertisement -

ரிஹனா குறித்த தகவல்:

இது தொடர்பாக ரிஹானா கூறியது, என்னுடைய தனிப்பட்ட காரணங்களால் தான் நான் தொடரில் இருந்து விலகுகிறேன். கதைப்படி என்னுடைய கதாபாத்திரம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருப்பதால் என்னால் பிரேக் கொடுக்க முடியாது. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஃபேமிலியை ரொம்பவே மிஸ் பண்றேன் என்று கூறியிருந்தார். தற்போது மாரி கதாபாத்திரத்தில் நடிகை மாதவி நடிக்கிறார். தற்போது ரிஹனா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ரிஹனா பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டியில் ரிஹனா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் மாரி கதாபாத்திரம் காமெடி ரோல். அந்த கதாபாத்திரம் ஆடியன்ஸை சிரிக்க வைக்கனும். அதனால் எப்படி முடியும் என்று முதலில் தயங்கினேன். காரணம், இதற்கு முன்னாடி நான் அந்த மாதிரி எந்த கதாபாத்திரத்திலும் நடித்ததில்லை. பின் இயக்குனர் சொன்னதை புரிந்து கொண்டு அதே மாதிரி நடித்துக் காட்டினேன். நான் எதிர்பார்த்ததை விட நன்றாக அந்த சீன் எல்லாம் வந்தது. பின் என்னால் காமெடி செய்ய முடியும் என்று நம்பிக்கை வந்தது.

-விளம்பரம்-

சீரியலில் விலகிய காரணம்:

அந்த கதாபாத்திரத்திற்கும் மக்கள் மத்தியில் நல்ல ரீச் கிடைத்தது. இப்ப வரைக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் என்னை மிஸ் பண்ணுவதாக பலரும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதோடு எனக்கு கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் தான் சீரியலில் நடிக்க முடியாமல் போனது. சிகிச்சைக்கு பிறகு வீட்டில் இருந்தபோது திடீரென்று பொன்னி சீரியலில் நடிக்க கேட்டார்கள். அதனால் நான் ஒத்து கொண்டேன். மேலும், நான் நன்றாக படிப்பேன். ஆனால், என்னுடைய குடும்ப சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வேலைக்கு வந்துவிட்டேன்.

மீடியா பயணம்:

சீக்கிரமாகவே திருமணம் ஆனதால் குழந்தைகள் பிறந்தார்கள். இருந்தாலும் அந்த கல்யாண வாழ்க்கை பாதியிலேயே போய்விட்டது. அதற்குப் பிறகுதான் நான் என்னுடைய கனவை நோக்கி ஓட ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் நான் ஹோம் நர்ஸ் ஆக வேலை செய்திருந்தேன். சின்ன கதாபாத்திரம் இருந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். விஜய் டிவியில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைப்பதற்கு ரொம்ப நன்றி கடன் பட்டிருக்கிறேன். என்ன ரோல் கொடுத்தாலும் அதில் நம்முடைய பெஸ்ட் கொடுக்கணும். இப்போது இந்த ப்ராஜெக்டை சந்தோசமாக தொடங்கியிருக்கிறேன். உங்களுடைய ஆதரவை கொடுங்கள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement