லியோ படத்தில் இத்தனை வயது பெண்ணிற்கு அப்பாவாக நடிக்கிறாரா விஜய் ?

0
868
Leo
- Advertisement -

விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 67 படத்தில் 24 வயது பெண்ணிற்க்கு அப்பா கதாபாத்திரத்தில் விஜய் நடிக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வருகின்றனர் அதற்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

நடிக்கும் நட்சத்திரங்கள் :

தற்போது கிடைத்துள்ள தகவலின் படி தளபதி 67 “லியோ” படத்தில் பல காலங்களுக்கும் பிறகு த்ரிஷா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார். மேலும் அர்ஜுன், பிரியா ஆனந்த், மிஸ்கின், கௌதம் மேனன், மன்சூர் அலி கான், சாண்டி மாஸ்டர், மேத்தியூ தாமஸ், மனோபாலா, சஞ்சய் தத் என பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன் 6ன் பிரபலம்” லியோ” படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

லியோ படத்தில் பிக் பாஸ் ஜனனி :

கடந்த பிக் பாஸ் சீனின் போட்டியாளர்களாக இருந்த பலர் தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 6ன் செல்லப்பிள்ளை ஜனனி “லியோ” படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் பரவியது. மேலும் ஜனனி விஜய்க்கு மகள் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இந்நிலையில் இது குறித்து ஜனனியிடன் ஒரு பேட்டியில் “விஜய் உங்களுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கிறாராமே” என கேட்ட போது அந்த தகவல் பற்றி வெளியில் சொல்ல எனக்கு அனுமதி இல்லை என்று அப்படியே மழுப்பி விட்டார்.

குழம்பிய ரசிகர்கள் :

இந்நிலையில் சமீபத்தில் லியோ படக்குழு ஒன்றாக புகைப்படம் எடுத்துக்கொண்டது. அந்த புகைப்படத்தில் காமெடி நடிகர் அர்ஜுனின் ஏழு வயதாகும் மகள் இயல் இருந்தார். இந்நிலையில் விஜய் இந்த 7 வயதிற்கு அப்பாவாக நடிக்க இருக்கிறாரா? இல்லை 24வயது இருக்கும் பிக் பாஸ் ஜனனிக்கு அப்பாவாக நடிக்கிறாரா? என்று ரசிகர்கள் குழம்பியுள்ளார். பொதுவாகவே விஜய்க்கு சிறிய வயது குழந்தைக்கு அப்பாவாக இருக்கும் கதாபாத்திரம் நன்றாகவே செட் ஆகும், இருந்தாலும் யாருக்கு அப்பாவாக விஜய் நடிப்பார் என்று வரும் ஆக்டோபர் 19 ஆம் தேதி தெரிந்துவிடும்.

Advertisement