ஆர்யா,ஜெயம் ரவியுடன் நடித்த நடிகையா இது – இவருக்கு இவ்ளோ பெரிய மகள்களா.

0
938
Renuka
- Advertisement -

தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ரேணுகா மேனனும் ஒருவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழி படங்களில் நடித்து இருந்தார். தமிழில் கலாபக்காதலன், தாஸ், பிப்ரவரி 14 போன்ற படங்களில் நடித்து இருந்தார். நடிகை ரேணுகா அவர்கள் 2006 ஆம் ஆண்டு சாப்ட்வேர் இன்ஜினியர் சூரஜ்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திரை உலகில் வேகமாக வளர்ந்து கொண்டிருந்த போது நடிகை ரேணுகா மேனன் அவர்கள் திடீரென்று திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவர் நடிப்பதை விட்டு விட்டார். பின் இவர் கலிபோர்னியாவிலேயே செட்டிலாகி விட்டார்.

-விளம்பரம்-

தற்போது நடிகை ரேணுகா அங்கேயே நடனப்பள்ளி ஒன்றை நிறுவி வருகிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். 13 வருடங்களாக நடிகை ரேணுகா மேனன் அவர்கள் கலிபோர்னியாவில் தான் வசித்து வருகிறார். நடிகை ரேணுகாவிடம் சினிமாவில் இருந்த காலகட்டங்களை குறித்து பேசிய போது அவர் கூறியது, நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே எங்களுடைய குடும்ப நண்பர் தயாரித்த மாயாமோகித சந்திரன் என்ற மலையாள படத்தில் நடித்தேன்.

- Advertisement -

ஆனால், அந்த படம் வெளிவரவில்லை. அதன் பிறகு டைரக்டர் கமலின் ‘நம்மள்’ என்ற படத்தின் மூலம் தான் நான் சினிமா உலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானேன்.இந்த படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்க வேண்டாம் என்று நான் நினைத்தேன். ஆனால், நம்மில் படம் முடிந்தவுடன் எனக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் வந்தது. அப்படியே தமிழ்,மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தேன். எனக்கு எப்போதும் சினிமாவில் மிகுந்த ஆர்வம் கிடையாது.

என்னுடைய ஆசையே வெளிநாட்டிற்கு சென்று உயர்கல்வி கற்க வேண்டும் என்பது தான். ஆனால், அதற்கு முன்னாடியே என் பெற்றோர்கள் எனக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார்கள். முதலில் பார்த்த சம்பந்தமே அவர்களுக்கு பிடித்து போய் விட்டதால் எனக்கு உடனடியாக திருமணத்தை செய்து வைத்தார்கள்.திருமணம் முடிந்தவுடன் நாங்கள் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியாவில் செட்டிலாகிவிட்டோம்.

-விளம்பரம்-

என்னிடம் நிறைய பேர் படத்தில் மீண்டும் நடிப்பீர்களா? என்று கேட்டார்கள். உண்மையை சொல்லப்போனால் நான் நடிக்க வர மாட்டேன். தமிழில் இருந்தும் எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. டெலிவிஷன் நிகழ்ச்சி நடத்த, தொகுத்து வழங்க என பல வாய்ப்புகள் வந்தன. அவை எதையும் நான் ஏற்றுக் கொள்ளவில்லை. ஏனென்றால் நான் ஒரு சராசரி நடிகை. எனக்கு சினிமாவில் மிகுந்த ஈடுபாடோ, எதிர்பார்ப்போ எதுவும் இல்லை. இந்த வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கூறினார்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரேணுகா தொடந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பம், சுற்றுலா போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தான் நடிகை ரேணுகாவின் குடும்ப புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இவரின் குடும்ப புகைப்படங்களை ரசிகர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றார்.

Advertisement