பிரபல சீரியல் நடிகை ரித்திகா கர்ப்பகால புகைப்படங்கள் தான் இப்போது இணையதளத்தில் பரவி வைரலாகியுள்ளது. ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஒலிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ரித்திகா. இவர் இன்ஸ்டாகிராமில் 2 மில்லியனுக்கு அருகில் பின் தொடர்பவர்களை வைத்து செலிப்ரிட்டியாக சின்னத்திரையில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன் தொடக்க காலத்தில் குடும்ப கஷ்டத்தால் நடிக்க வந்த நடிகர் ரித்திகா, ‘ராஜா ராணி’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். அதன் பின்னர் சிவா மனசுல சக்தி, சாக்லேட், திருமகள் என்று 2018 ஆம் ஆண்டில் இருந்து நடித்து வரும் ரித்திகா தற்போது சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் தான் நடித்த பாக்கியலட்சுமி சீரியல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். பின்பு சில காரணங்களால் அந்த சீரியலை விட்டும் விலகினார்.
ரித்திகா குறித்து:
மேலும், தொகுப்பாளனி, நடனம், பாடகர், ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் குக்கிங் ஷோ என கலக்கி வந்த ரித்திகா 4ஜி என்ற குறும்படத்தில் நடித்திருக்கிறார். தனியாக ஒரு youtube சேனலையும் நடத்தி வரும் ரித்திகா தனது கடந்த கால வாழ்க்கை மற்றும் சீரியல் போன்ற தகவல்களை பதிவிட்டு வருகிறார். குறிப்பாக கடந்த 2020 ஆம் ஆண்டு ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி ரித்திகாவுக்கு ஒரு பெரிய புகழை தேடி தந்தது என்றே கூறலாம்.
ரித்திகா திருமணம்:
இந்த நினைவில் தான் கடந்த 2022-ம் ஆண்டு ரித்திகா தமிழ்ச்செல்வி விஜய் டிவியில் பணியாற்றிய வினு என்பவரை திருமணம் செய்து கொண்டார். ரித்திகா திருமணம் செய்து கொண்ட வினு என்பவர் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி வருகிறார். இருவரும் விஜய் டிவியில் பணியாற்றிய நிலையில் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நடந்த நிலையில், திருமணம் வரவேற்பு சென்னையில் வைத்து மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
ரித்திகா புகைப்படங்கள்:
மேலும் ரித்திகாவின் கணவர் ஒரு தொழிலதிபர் எனவும் கூறப்படுகிறது. தனது வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு தருணங்களையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவார் ரித்திகா. தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில், தன் கணவரோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்களை அவர் சமூக வலைதள பக்கங்களில் முதன் முதலாக வெளியிட்டு இருக்கிறார். அதனைத் தொடர்ந்து ரித்திகாவின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
ரித்திகா திரைப்பயணம்:
திருமணத்திற்கு பிறகு சீரியல்கள் மற்றும் சின்னத்திரையில் இருந்து விலகி இருக்கும் ரித்திகா, நம்மவர் கமல், ஸ்டார்ட் மியூசிக் சீசன் 2 மற்றும் காமெடி ராஜா கலக்கல் ராணி போன்ற ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கேற்று இருந்தார். குறிப்பாக ‘நகைச்சுவை ராஜா கலக்கல் ராணி’ நிகழ்ச்சியில் முதல் இரண்டாம் இடத்தை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.