எம்.ஜி.ஆர் மூலம் ரித்விகாவுக்கு அடித்தது யோகம்.! தானாக தேடி வந்த ‘சிஎம்’ நாற்காலி..!

0
529
Rythivika
Rythivika

புரட்சி தலைவர் என்ற பெயரை மக்கள் என்றுமே மறக்க முடியாது. நடிகராக இருந்து பின்னர் தமிழகத்தின் முதல்வராகி பின் பல நல்ல திட்டங்களை மக்களுக்கு அளித்து இன்று வரை மக்கள் மனதில் நீங்காத ஒரு இடத்தை பிடித்திருப்பவர் மறைந்த நடிகர் எம் ஜி ஆர் அவர்கள். இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகி வருகிறது.

இயக்குனர் அ.பாலகிருஷ்ணன் என்பவர் இத்திரைப்படத்தை தயாரித்து, இயக்குகிறார். இந்த படத்தின் திரைக்கதையை செம்பூர் ஜெயராஜ் என்பவர் எழுதியுள்ளார். இந்த படத்தை இரமணா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எம் ஜி ஆர் க தாபாத்திரத்தில் நாடக கலைஞர் சதீஸ் குமார் என்பவர் நடித்து வருகிறார். எம் ஜி ஆர் போன்றே தோற்றம் இருந்ததால் அவரை எம் ஜி ஆர் கதாபத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.

இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் ஏற்கன்வே தொடங்கி விட்டனர். அதில் எம் ஆர் ராதா கத்பத்திரத்தில் பாலா சிங் என்பவரும், இயக்குனர் பந்துலு கதாபத்திரத்தில் பிரபல நடிகர் ஒய் ஜி மஹிந்திரனும், எம் ஜி ஆரின் அண்ணன் கதாபத்திரத்தில் மலையாள நடிகர் ரகு நடித்து வருகின்றனர். அதுபோக இந்த படத்தில் எம் ஜி ஆரின் உயிர் தொண்டனாக காமெடி நடிகர் வையாபுரி நடிக்கவுள்ளார். இந்த படத்தில் எம் ஜி ஆரின் வாழ்கையில் மிகவும் முக்கியமனவரான அவரது மனைவி ஜானகி கதாபத்திரத்தில் நடிக்க போவது வேறு யாரும் இல்லை தற்போது பிக் பாஸ் போட்டியாளராக பங்குபெற்றுள்ள நடிகை ரித்விகா தான்.

mgr-tamil-movie

மறைந்த நடிகையான ஜானகி எம் ஜி ஆரின் மனைவியாக இருந்து வந்தார். எம் ஜி ஆர் முதலைச்சராக இருந்து மறைந்த போது சிறிது காலம் ஜானகி தான் தமிழக முதல்வராக இருந்து வந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் கட்ட பணிகள் விரைவில் துவங்க இருக்கிறது அதில் ஜானகி கதாபத்திரத்தில் நடிகை ரித்விகா நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ரித்விகா பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று வருவதால் அவர் வெளியே வந்ததும் இந்த படத்தில் நடிக்க துவங்கிவிடுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.