கோலாகலமாக நடந்த பிக் பாஸ் பிரபலத்தின் வளைகாப்பு – குவியும் வாழ்த்துக்கள்

0
122
- Advertisement -

மரியா ஷாரிக் ஹாசனுக்கு தடபுடலாக வளைகாப்பு நடத்தி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ்கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது ரியாஸ்கான் படங்களில் மற்றும் சீரியலில் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர்கள் காதலுக்கு எதிர்ப்பு வந்தாலும் நாளடைவில் ஏற்று கொண்டார்கள். உமா ரியாஸ்கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணசித்திர வேடங்களில் தான் நடித்து வருகிறார்.

- Advertisement -

உமா ரியாஸ்கான் குறித்த தகவல்:

அதோடு இவர் சின்னத்திரை நிகழ்ச்சியில் கூட பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் இவர் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். மேலும், இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். அதில், இவர் சமைப்பது, நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனாலே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள்.

ரியாஸ்கான்-உமா குடும்பம்:

மேலும், இந்த தம்பதிக்கு சாரிக் ஹாசன், சமந்த் ஹாசன் என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கிறது. அதில் மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து இருந்தார். இருந்தும் இவருக்கு பெரிய அளவு பட வாய்ப்பு அமையவில்லை. இவர் பென்சில், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை.

-விளம்பரம்-

சாரிக் திருமணம்:

தற்போது இவர் படங்களில் முயற்சி செய்து வருகிறார். சாரிக் ஹாசனுக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஓட்டலில் தான் திருமணம் நடைப்பெற்றது. இந்த திருமணத்தை எளிமையான முறையில் உமா- ரியாஸ்கான் நடத்தி இருந்தார்கள். இந்த திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்து இருந்தார்கள். மேலும், ஷாரிக் திருமணம் செய்து கொண்டவர் மரியா ஜெனிபர். அதோடு இவர் ஷாரிக்கை விட 3 வயது பெரியவர். இவர் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகளுக்கு தாய் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாரிக்- மரியா வளைகாப்பு:

திருமணத்திற்குப் பிறகு ஷாரிக்- மரியா பதிவிட்ட வீடியோக்கள் எல்லாம் இணையத்தில் படு வைரலாகி இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் ஷாரிக், தன் மனைவி மரியா கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மரியாவிற்கு இன்று தடபுடலாக வீட்டிலேயே வளைகாப்பு நடத்திருக்கிறார்கள். இதில் சின்னத்திரை நடிகர்கள், நண்பர்கள் என பலரும் கலந்துகொண்டு சாரிக்- மரியா தம்பதியை வாழ்த்தியிருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படம், வீடியோக்கள் தான் இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement