80களில் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமாக்களில் பிஸியான நடிகையாக இருந்தவர் நடிகை ரூபிணி. இவருடைய உண்மையான பெயர் கோமல் மதுவாக்கார். இவர் மும்பையில் பிறந்து வளர்ந்தவர்.

Advertisement

80களின் இறுதியில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் இந்த ரூபினி. ரஜினி, கமல், மம்மூட்டி, மோகன்லால், சத்யராஜ், விஜயகாந்த், மோகன், ராமராஜன் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து அசத்தியவர்.

தற்போது 48 வயதாகும் அவர் அமிதாப் பச்சனின் மிலி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார். அதன் பின்னர் தென்னிந்திய படங்களில் நடிப்பதற்கென சென்னையில் குடி வந்தார். 1987ஆம் ஆண்டு விஜயகாந்தின் கூலிக்காரன் படத்தில் அறிமுகம் ஆனார்.

Advertisement

Advertisement

அதன் பின்னர் மனிதன், ராஜா சின்ன ரோஜா, என்ன பெத்த ராசா, அபூர்வ சகோதரர்கள், புலன் விசாரணை, மைக்கேல் மதன காமராஜன், கேப்டன் பிரபாகரன், உழைப்பாளி, தாமரை ஆகிய பல ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தனது உறவினர், மோகன் குமார் ரயானா என்பவருடன் கடந்த 2000ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு அனிஷா ரயான் என்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. தற்போது அனிஷா கல்லூரியில் படித்து வருகிறார். மேலும், திருமணத்திற்கு பின்னர் நடிப்பதை நிறுத்திவிட்டார் ரூபிணி.

தற்போது குழந்தைகளுக்கான ஒரு பவுண்டேசன் வைத்து நடத்தி வருகிறார் ரூபிணி. இவருடைய கணவர் பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement