நாலு பேர் சொன்ன பின்தான் படத்துல நடிச்ச ஞாபகம் வருது – ‘மதகஜராஜா’ அனுபவம் பகிர்ந்த நடிகை S.N. பார்வதி

0
183
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான பழம்பெரும் நடிகையாக இருப்பவர் எஸ்.என். பார்வதி. இவர் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சி நடிகையும் ஆவார். இவர் தன்னுடைய 13 வயதிலேயே நாடகங்களில் நடிக்க தொடங்கினார். கிட்டத்தட்ட இவர் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட நாடகங்களில் நடித்திருக்கிறார். அதற்குப்பின் இவர் பணம் தரும் பரிசு என்ற படத்தில் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

மேலும், இவர் சிவாஜி, எம்ஜிஆர், ரஜினி, கமல் காலம் தொடங்கி நாலாவது தலைமுறை நடிகர்களுடனும் இவர் படங்களில் நடித்திருக்கிறார். அந்த வகையில் தற்போது இவர் விஜய் விஷால் நடிப்பில் வெளியாகியிருந்த மதகஜராஜா படத்தில் நடித்திருந்தார். சுந்தர்.சி மற்றும் விஷால் கூட்டணியில் வெளியாகி இருந்த படம் தான் மதகஜராஜா. இந்த படத்தில் விஷாலுடன் சந்தானம், சோனு சூட், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, மணிவண்ணன், சூட், மயில்சாமி, சிட்டிபாபு உட்பட பலர் நடித்து இருந்தார்கள். ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது.

- Advertisement -

மதகஜராஜா படம்:

இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். அது மட்டும் இல்லாமல் இந்த படம் 2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகுவதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனை ஏற்பட்டதால் படத்தின் வெளியீடு தள்ளிப்போனது. சமீபத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 12ஆம் தேதி இந்த படம் வெளியாகி இருந்தது. 12 ஆண்டுகள் கழித்து இந்த படம் வெளியானதால் சோசியல் மீடியாவில் அதிகமாக பேசப்பட்டு வந்தது. மேலும், மற்ற பொங்கல் ரிலீஸ் படங்களை காட்டிலும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பைப் இப்படம் பெற்றுள்ளது.

எஸ்.என் பார்வதி பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் எஸ்.என் பார்வதி, நான் சிவாஜி- எம்ஜிஆர் காலத்திலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேன். அதற்கு பிறகு தான் சீரியலுக்கு நடிக்க வந்தேன். சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே கொரோனா வந்தது. வயதானவர்கள் எல்லாம் நடிக்க கூப்பிடாதீர்கள் என்று சொல்லிவிட்டார்கள். அதனால் கொஞ்சம் கேப் விட்டது. மூணு மணி நேரம் கேப் விடாமல் நடிக்கணும் என்று சொன்னார்கள். ஆனால், இப்போது முடியவில்லை. கிடைக்கும் ஒன்னு ரெண்டு சீரியலில் நடித்துக் கொண்டு என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னை பொருத்தவரை ஒரு ஆர்ட்டிஸ்ட்டுக்கு பணத்தைவிட அடையாளம் கண்டுபிடிப்பது ரொம்ப முக்கியம்.

-விளம்பரம்-

விஷால் குறித்து சொன்னது:

நல்லா நடிக்கிறாங்க என்று நாலு பேர் சொல்கிற வார்த்தை தான் எனக்கு எனர்ஜியை தருகிறது. அந்த வகையில் ரொம்ப வருஷத்துக்கு பிறகு அம்மா உங்களை படத்தில் பார்த்தோம் என்று அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் சொன்னது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப வருஷம் கழித்து மதகஜராஜா படம் ரிலீஸ் ஆகி இருந்தது. அந்த படம் சூட்டிங்காக கொடைக்கானலில் ஒரு வாரம் தங்கி இருந்து நடித்தோம். இப்பவும் அந்த நினைவுகள் ஞாபகத்தில் இருக்கிறது. ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷாலை என் அளவுக்கு ஜாலியா கேலி யாரும் செய்து இருக்க மாட்டாங்க. இத்தனைக்கும் அந்த தம்பி படத்தில் நான் நடித்தது இது தான் முதல் முறை. ஆனால், எங்களுக்கிடையில் கேலி கிண்டலுக்கு அளவே இல்லாமல் போச்சு.

மதகஜராஜா படம் பற்றி சொன்னது:

ஆரம்பத்தில் இருந்தே நடித்த படங்களை கணக்கு வைக்கும் பழக்கம் இல்லை. அந்த படம் வெளிவந்துச்சா, எப்படி இருக்கும் எல்லாம் யாரிடம் கேட்க மாட்டேன். யாராவது வந்து சொன்னாதான் எனக்கு தெரியும். இந்த படம் வெளியாகுவதற்கு முன்னாடியே பிரஸ்மீட் எல்லாம் நடத்தி இருந்தார்கள். என்னை யாரும் கூப்பிடவில்லை. படம் வெளியாகி நாலு பேர் வந்து என்னிடம் சொன்ன பிறகுதான் நான் படத்தில் நடித்த ஞாபகமே வருது. விஷாலை பார்த்தால் இது தொடர்பாக சண்டை வாங்கணும் என்று நினைத்தேன். 60 வருஷமாக நடித்துக் கொண்டிருக்கிறவர்களுக்கு. 12 வருஷம் கழித்து ஒரு படம் ரிலீஸ் ஆகுவது பெரிய சாதனை தான். இந்த படம் என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு படம் என்று கூறியிருக்கிறார்.

Advertisement