திருச்சி கல்லூரிக்கு பரீட்சை எழுத சென்றுள்ள சாய் பல்லவி- அப்போ இவர் மருத்துவர் இல்லையா ? இதோ விவரம்.

0
1186
sai-pallavi

மலையாளத்தில் வெளியான ‘ப்ரேமம்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலர் டீச்சாராக வந்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. . இவர் திரைப்பட நடிகை மட்டும் இல்லாமல் ஒரு சிறந்த நடனக் கலைஞரும் ஒரு மருத்துவரும் ஆவார். இவர் நடிப்பின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக தன்னுடைய மருத்துவத் தொழிலை விட்டு விட்டார். நடிகை சாய்பல்லவி அவர்கள் 2016 ஆம் ஆண்டு தன்னுடைய மருத்துவ பட்டத்தைப் பெற்றார்.

மேலும், இவருக்கு நடனத்தின் மீதும் அதிக ஆர்வம் உடையவர். அதனால் இவர் 2008 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். இவர் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளி வந்து மாபெரும் பிளாக் பஸ்டர் படமாக அமைந்த ப்ரேமம் என்ற திரைப்படத்தில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் அதிகமாக கவரப்பட்டார்.

- Advertisement -

நடிகை சாய் பல்லவி 2008-ல் தாம்தூம் என்ற படத்தில் கங்கனா ரணாவத் தோழியாக நடித்திருந்தார் அதன் பின்னர் தனது பெற்றனூர் விருப்பபடி மருத்துவ படிப்பை வெற்றிகரமாக முடித்து பின்னர் மீண்டும் சினிமாவில் நடிக் க துவங்கினார். அனால் சினிமாவில் நடிக்க துவங்கியதும் தம்மால் சினிமா மற்றும் டாக்டர் தொழிலை ஒரேய நேரத்தில் பார்க்க முடியாது என்று கூறி தனது பெயருக்கு பின்னால் டாக்டர் பட்டத்தை கூட போட்டுக் கொள்ளவில்லை சாய் பல்லவி.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி பரீட்சை எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற புகைப்படங்கள் சில சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. . கடந்த 2016-ம் ஆண்டு ஜார்ஜியாவில் மருத்துவம் படித்து முடித்த சாய்பல்லவி இன்னும் பயிற்சி மருத்துவராக தன்னைப் பதிவு செய்யவில்லை. அதேசமயம் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்தவர்கள் இத்தேர்வை எழுதத் தேவையில்லை. அதனால் தான் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக வந்திருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement