தென்னிந்திய சினிமாவில் பிரபல நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நாக சைதன்யா – சமந்தா ஜோடியின் சொத்து மதிப்பு விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தென்னிந்திய சினிமா உலகில் பல ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்த சமந்தாவுக்கு சில வருடங்களாகவே தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். பின் சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
பின் 2017 ஆம் ஆண்டு இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா அவர்கள் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். திருமணத்திற்கு பிறகு நடிகை சமந்தா அவர்கள் சரியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஓ பேபி திரைப்படம் நடிப்பில் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் பாருங்க : ஹீரோயின் ஆன சுந்தரி சீரியல் நடிகை – ஹீரோ இந்த கனா காணும் சீரியல் நடிகர் தான் – இதோ போஸ்டர்.
அதை தொடர்ந்து இவர் நடிப்பில் வந்த ஜானு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இவர் கடைசியாக தமிழில் நடித்த படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்திற்கு பிறகு தற்போது இவர் மீண்டும் தமிழில் நடிக்க உள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடிகை சமந்தா நடிக்கிறார். இந்த படத்தில் இவருடன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவும் நடிக்க உள்ளார்கள். தமிழை விட இவருக்கு தெலுங்கில் தான் தற்போது ரசிகர்கள் அதிகம். அதற்கு முக்கிய காரணமே இவர் நாகர்ஜுனா வீட்டின் மருமகள் ஆன பின்னர் தான்.
இப்படி ஒரு நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு பற்றிய விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இத்தம்பதியின் மொத்த சொத்து மதிப்பு ரூ.122 கோடியாம், இதில் சமந்தாவின் சொத்து மதிப்பு ரூ.84 கோடி என்றும், நாக சைதன்யாவின் சொத்து மதிப்பு ரூ.38 கோடி என்றும் கூறப்படுகிறது. நடிகை சமந்தா தற்போது ஒரு படத்திற்கு 3 கோடி வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.