தென்னிந்திய சினிமாவில் நட்சத்திர ஜோடிகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர்கள் நாக சைதன்யா சமந்தா ஜோடி 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதி கடந்த 2ஆம் தேதி விவாக ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விஷயத்தில் நாகசைதன்யா விட சமந்தா தான் சமூகவலைதளத்தில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் மன அழுத்தத்தில் இருந்த சமந்தா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய நெருங்கிய தோழியுடன் ஹெலிகாப்டரில் ஆன்மீக பயணத்தை துவங்கி இருந்தார்.
இப்படி ஒரு நிலையில் நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியி, தனது அம்மா கொடுத்த அட்வைஸ் குறித்து பதிவிட்டுள்ளார். அதில், தற்போது நீ என்னவாக இருக்கிறாயோ அதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியாக இரு. நாளை நீ என்னவாக ஆக வேண்டுமோ அதற்காக போராடிக் கொண்டே இரு’ என்று தன் அம்மா சொன்னதாக பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சமந்தாவின் விவாகரத்துக்கு பின் பேசிய அவரின் தந்தை, சமந்தா- நாக சைதன்யா விவாகரத்து விஷயத்தை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.
இதையும் பாருங்க : அர்ஜுனின் நிச்சயதார்த்த புகைப்படம், அவர் மடியில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா ? அவரும் பிரபல நடிகர் தான்.
இவர்களுடைய திருமண தகராறு குறித்து எனக்கு ஏற்கனவே தெரியும். இந்த நிலைமை சீராகி விடும் என்று நம்பினேன். ஆனால், அப்படி நடக்கவே இல்லை. இவர்களுக்கிடையே இருந்த பிரச்சினை நாட்கள் செல்லச் செல்ல முற்றிவிட்டது.என் மகள் எந்த முடிவெடுத்தாலும் தெளிவாகத்தான் எடுப்பார். அதேபோல் இந்த முடிவையும் எடுப்பதற்கு முன் நிறைய முறை யோசித்து இருப்பார் என்று நான் நம்புகிறேன். என் மகளுக்கு நான் ஆதரவாக இருப்பேன் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவகாரத்துக்கு பின்னரும் நடிகை சமந்தா தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்து வரும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து வரும் சமந்தா, அடுத்தடுத்து தெலுங்கில் இரண்டு படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் வெளியாகி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.