தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிகை சமந்தா தொடந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், சமந்தாவின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டி. இவர் மாடலிங் துறையில் பிரபலமானவர். அதோடு உடற்பயிற்சி ஆர்வலரும் ஆவார். இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தாவுடன் எடுத்து கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு உள்ளார்.
இந்நிலையில் நடிகை சமந்தாவின் நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி ஆகி உள்ளது. இதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ மூலம் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறி இருப்பது, நானும் எனது கணவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளோம். எந்த அறிகுறிகளும் இல்லாமல் மருத்துவர்களின் சோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொரோனா பாதிப்புக்குள்ளாகும் போது எனது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி இருந்தார். அதோடு கொரோனாவிலிருந்து மீண்டு வந்த அனுபவங்களையும் அந்த வீடியோவில் பகிர்ந்துள்ளார். ஷில்பா ரெட்டி பதிவிட்ட இந்த வீடியோ 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை கடந்து உள்ளது.
சாதாரண மக்கள் முதல் பெரிய பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் தாக்கி வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவின் அச்சுறுத்தல் அதிகமாகி கொண்டே செல்கிறது. அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் உலகமே ஸ்தம்பித்து போய் உள்ளது. உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்க போராடி வருகிறது.