விஜய், அஜித்துடன் நடித்த சங்கவி.! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க.!

0
1621
sangavi
- Advertisement -

நடிகை சங்கவி 1977ஆம் ஆண்டு அக்டோபர் 4ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் மைசூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் காவியா ரமேஷ். இவருடைய பாட்டி ஒரு கன்னட நடிகை. தனது 16 வயதில் அஜித்தின் அமராவதி படத்தில் நடித்து பிரபலம் ஆனார். அந்த படமே இவருக்கு அறிமுக படமாக இருந்தது.

-விளம்பரம்-

அதன் பின்னர் இவருடைய நடிப்பு திறமையால் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழி படங்களிலும் 95 படங்களுக்கு மேல் நடித்தார். விஜய், அஜித், ரஜினி, விஜயகாந்த், கமல் சரத்குமார், பிரபு, சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்தவர் சங்கவி.

இதையும் படியுங்க : சூர்யாவை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்.! இளம் நடிகை ஓபன் டாக்.!

- Advertisement -

அஜித்துடன் அமராவதி, விஜயுடன் கோயமுத்தூர் மாப்பிள்ளை, ரசிகன், விஷ்ணு, நிலாவே வா உள்ளிட்ட படங்களில் நடித்தார். தனுசின் சுள்ளான் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார். அவருக்கு வயது 30யை தாண்டியவுடன் பட வாய்ப்புகள் குறைந்தது. இருந்தும் கோகுலத்தில் சீதை, சாவித்ரி ஆகிய சீரியல்களிலும் நடித்தார் சங்கவி.

சங்கவி கடந்த 2016 ஆம் ஆண்டு தனது 39 வயதில் ஒரு ஐ.டி கம்பெனி ஒனருடன் பெங்களூரில் திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில் நடிகை சங்கவி நடிகை மீனுவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் சங்கவி.

-விளம்பரம்-
Advertisement