தமிழில் பல்வேறு படங்களில் நடித்துள்ள இளம் நடிகை சணுஷ்கா தற்கொலைக்கு முயன்றுள்ளதாக கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பல்வேறு குழந்தை தற்போது அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அந்த வகையில் தமிழில் 2001 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான காசி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகி இருந்தார். ஆனால் தனது ஐந்து வயதிலேயே மலையாளத் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். காசி திரைப்படத்திற்குப் பின்னர் விக்ரம் நடிப்பில் வெளியான பீமா திரைப்படத்தில் திரிஷாவின் தங்கையாக நடித்திருந்தார்.
அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். மிகவும் சிறுவயதிலேயே சினிமாவில் நுழைந்து விட்டதால் அவருக்கு பெரிதாக கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. கார்த்திக் நடித்த அலெக்ஸ் பாண்டியன் படத்தில் சந்தானத்தின் மூன்று தங்களில் ஒருவராக நடித்திருந்தார். இறுதியாக சசிகுமார் இயக்கத்தில் வெளியான கொடிவீரன் படத்தில் பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சசிகுமாரின் தங்கையாக நடித்திருந்தார் சனுஷா.
இதையும் பாருங்க : வீட்டில் உடற்பயிற்சி செய்த போது விபரீதம் – வலியால் துடிதுள்ள கார்த்திக் – மருத்துவமனையில் அனுமதி.
தற்போது கையில் எந்த பட வாய்ப்பும் இல்லாததால் மிகவும் கவலையில் இருக்கிறார் அம்மணி. இப்படி ஒரு நிலையில் இவர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாககடந்த சில நாட்களுக்கு முன் கூறி இருந்தார்.பின்னர் தனது தம்பியை பற்றி யோசித்தால் அந்த எண்ணத்தில் இருந்து வந்ததாக கூறியிருந்தார். சமீப காலமாக உடல் எடை கூடி குண்டாக இருந்த இவர் பல உருவக் கேலிக்கும் ஆளானார்.
இப்படி ஒரு நிலையில் இவர் கடந்த சில மாதத்திற்கு முன்னர் உடல் எடையை குறைத்து இருந்தார். உடல் எடையை குறைத்த இவர் அடிக்கடி போட்டோ ஷூட்களை நடத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் மலையாள அட்டை படம் ஒன்றிற்கு படு ஓப்பனான உடையில் போஸ் கொடுத்துள்ளார். முதன் முறையாக அவரை இப்படி ஒரு கவர்ச்சி கோலத்தில் பார்த்த ரசிகர்கள் ஷாக்கடைந்து உள்ளனர்.