என்னது மறைந்த இந்த சரவணன் மீனாட்சி சீரியல் நடிகர் தான் சரண்யாவின் முதல் கணவரா ? யார் தெரியுமா ?

0
8494
saranya
- Advertisement -

ஒரு காலத்தில் உலகநாயகன் கமலுக்கே ஜோடியாக நடித்தவர் சரண்யா பொன்வண்ணன். நாயகன், அஞ்சலி என பல ஹிட் படங்களில் நடித்த சரண்யா தற்போது அனைத்து படங்களிலும் அம்மா கேரக்டரில் நடித்து அசத்தி வருகிறார். இவர் தன்னுடன் நடித்த பொன்வண்ணனை 1995ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர்.

-விளம்பரம்-

பின்னர் நடிகை சரண்யா பொன்வண்ணன் அவர்கள் படங்களில் குணசித்திர வேடங்களிலும், பெரும்பாலும் நாயகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்திலும் தான் நடித்து உள்ளார். இவர் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. மேலும், இவர் தமிழ் சினிமா உலகில் உள்ள பல முன்னணி நடிகர்களுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்.

- Advertisement -

தென்மேற்கு பருவக்காற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியுள்ளார் சரண்யா பொன்வண்ணன். எம்டன் மகன், வேலையில்லா பட்டதாரி, களவாணி, முத்துக்கு முத்தாக, மகளிர் மட்டும், ஒருகல் ஒருகண்ணாடி, கொடி என பல படங்களில் அம்மாவாக நடித்து தன் அபார திறமையை நிரூபித்துள்ளார் சரண்யா. பல பேருக்கு நடிகை சரண்யாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்தது என்பது தெரியாது.

Saranya-Ponvannan-1
இரண்டாம் கணவர் பொன்வண்ணன் மற்றும் மகள்களுடன் சரண்யா

ஆம், நடிகை சரண்யா, கடந்த 1988 ஆம் ஆண்டு நடிகர் ராஜசேகரை திருமணம் செய்துகொண்டார். நடிகர் ராஜசேகர் தமிழில் பல படங்களில் நடித்துள்ளார். அதிலும் விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் ஹிட் தொடரான சரவணன் மீனாட்சி தொடரில் கூட நடித்துள்ளார். மேலும், நடிகர் ராஜசேகர் மற்றும் சரண்யா திருணம் ஆன ஓராண்டிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். கடந்த ஆண்டு தான் ராஜசேகர் காலமானர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement