பிரிந்த தனது கணவர் மீது போலீஸில் புகார் கொடுத்த சரிதா.! இந்த வயசுல இது தேவையா சார்.!

0
1907
- Advertisement -

தமிழ், தெலுங்கு பட உலகில் 1970 மற்றும் 80-களில் முன்னணி கதாநாயகியாக இருந்த சரிதா, மலையாள நடிகர் முகேசை காதல் திருமணம் செய்து பின்னர் பிரிந்து விட்டார். தற்போது துபாயில் வசிக்கும் அவர் சமீபத்தில் ஐதராபாத் வந்தபோது குடும்பம் மற்றும் சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்து கூறியதாவது

-விளம்பரம்-

திருமணத்துக்கு பிறகு குழந்தைகளை வளர்ப்பதற்காக நடிப்பில் இருந்து விலகினேன். மகளிர் மட்டும் படத்தில் நடிக்கும்படி கமல்ஹாசன் வற்புறுத்தியும் மறுத்தேன்.கணவர் முகேஷ் எனக்கு ஆதரவாக இல்லை. அவர் எனக்கு சரியானவர் இல்லை என்பது தாமதமாகத்தான் தெரிந்தது.

- Advertisement -

எங்களுக்கு இரண்டு குழந்தைகள். எனக்கு விவாகரத்து கொடுக்காமலேயே முகேஷ் வேறு திருமணம் செய்து கொண்டார். மோசடி செய்து விவாகரத்து பத்திரம் வாங்கி கொண்டார்.

இந்த விஷயத்தில் நான் வழக்கு போட்டு இருந்தால் 7 வருடம் அவர் சிறையில் இருந்து இருப்பார். ஆனால் அப்படி செய்ய வில்லை. அவர் செல்வாக்கு மிகுந்த மனிதர். வழக்கு தொடர்ந்தாலும் அவரை என்னால் எதுவும் செய்ய முடியாது. நீ கேரளாவில் என்னை எதுவும் செய்ய முடியாது என்று நேரடியாக சவால் விட்டார்.

-விளம்பரம்-

போலீசில் புகார் கொடுத்தும் பயன் இல்லை. அதன்பிறகு அந்த விஷயத்தை கடவுளிடமே விட்டு விட்டேன். என் 2 மகன்கள்தான் எனது தைரியம். அவர்களுக்காக வாழ்கிறேன். ஒரு மகன் டாக்டர். இன்னொரு மகன் இன்சூரன்ஸ் கம்பெனியில் வேலை பார்க்கிறான். அவர்களுக்கும் சினிமாவில் ஆர்வம் இருக்கிறது. இருவரும் விரைவில் கதாநாயகர்களாக நடிப்பார்கள்.” இவ்வாறு சரிதா கூறினார்.


Advertisement