நாடுமுழுவதும் கோபிடடபட்ட இந்த பண்டிகையில் சில திரைப்பட பிரபலங்களும் தாங்கள் சகோதரராக நினைக்கும் நபரின் கையில் ராக்கி கட்டி தங்களது சகோதர துவத்தை வெளிப்படுத்தினர். இந்நிலையில் ;''வனமகன்'' பட நாயகி க்ஷேயிஷா , இயக்குனர் ஏ எல் விஜய்க்கு ராக்கி கட்டி தனது பாசத்தை பொழிந்துள்ளார். தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிட்சியமானவர் நடிகை க்ஷேயிஷா. இவரை முதன் முதலில் சினிமாவில் அறிமுகப்படுத்தியது இயக்குனர் ஏ எல் விஜய் தான். அதற்காக என்றும் இயக்குனர் ஏ எல் விஜய்யை தனது சகோதரர் என்று அழைத்து வந்தார் நடிகை க்ஷேயிஷா. இந்நிலையில் நேற்று(ஆகஸ்ட் 26) ரக்க்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு இயக்குனர் ஏ எல் விஜய்க்கு ராக்கி கட்டிவிட்டு மகிழ்ந்துள்ளார். இந்த தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை க்ஷேயிஷா.Happy Raksha Bandhan! Spent some quality time and had a great afternoon with the bestest brother ever...Vijay Anna!! It’s a super feeling to know that a brother is always going to be there for you no matter what! ??❤️ pic.twitter.com/WXbU2ZWHuY
— Sayyeshaa (@sayyeshaa) August 26, 2018
சினிமாReading time · 1 min





