இவளுக்காக தான் இந்த சீசன் பாக்குறேன், என் தங்கை பேரும் இது தான் – 23 வயதில் இறந்த தன் தங்கை குறித்து உருகிய ஷகீலா. அட, இந்த நடிகையா ?

0
5215
shakeela
- Advertisement -

தன்னுடைய தங்கை குறித்து சகிலா கூறி இருக்கும் தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் பரவலாகி வருகிறது. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். போதும் போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கி இருந்தார்.

-விளம்பரம்-

ஆரம்பத்தில் இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து இருந்தார். பின் இவர் கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். மேலும், இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி நடிகையாக நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள கவர்ச்சி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர்.

- Advertisement -

ஷகீலாவின் திரைப்பயணம்:

இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்கள். மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்து இருக்கிறார். இளமை போன பின்னரும் இவர் பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி:

இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது. அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான்.

-விளம்பரம்-

நிகழ்ச்சியில் சகிலா:

கடந்த இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார். அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் இவர் தன் தங்கை குறித்து கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு இந்த வாரம் நடிகை சகிலா வந்திருக்கிறார்.

சகிலா தங்கை பற்றிய தகவல்:

மூன்றாம் சீசன் செலிப்ரேஷன் வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள். செட்டுக்குள் வந்ததும் ஷகிலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என்று கூப்பிட்டு புகழ் உருகினார். மேலும், நிகழ்ச்சியில் சகிலா தன்னுடைய தங்கை பற்றி கூறியது, இந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்திருக்கும் சீத்தலைக்காகத் தான் இந்த சீசன் பார்க்கிறேன். என்னுடைய தங்கை பெயரும் அது தான். விஜயுடன் ஓ பியாரி பானி பூரி பம்பாய் காரி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கிறார். அவர் 23 வயதிலேயே இறந்துவிட்டார் என்று சகிலா கூறியிருக்கிறார். தற்போது சகிலாவின் தங்கை புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement