எனக்கு 50ஆயிரம் அவனுக்கு இவ்ளோ குடுத்தாங்க, அத அப்படியே என் கிட்ட கொடுத்துட்டேன் – விவேக் குறித்து மறைந்த நடிகர் குமரிமுத்து.

0
4800
kumari
- Advertisement -

சனங்களின் கலைஞனாக இருந்த சின்னக் கலைவானர விவேக் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் (ஏப்ரல் 17) காலமான சம்பவம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறார் நடிகர் விவேக். நகைச்சுவையின் மூலம் தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் விவேக்.நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வரும் விவேக் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். இப்படி ஒரு நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

-விளம்பரம்-

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் பின்னர் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. விவேக்கின் மறைவில் இருந்து மீள முடியாமல் பலர் இருந்து வரும் நிலையில் மறைந்த நடிகர் குமரி முத்து பேட்டி ஒன்றில் தனது மகளின் திருமணத்திற்காக விவேக் செய்த உதவி குறித்து கூறி கண்ணீர் விட்டுள்ள வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இதையும் பாருங்க : ஜூலி முதல் பாலா வரை, போட்டியாளர்களாக பிக் பாஸ் பிரபலங்கள் – நடுவர்கள் யார் ? என்ன நிகழ்ச்சி ?

- Advertisement -

மக்களை சிரிக்க வைக்க காமெடியன்கள் தனது காமெடிகள் மூலம் கஷ்டப்பட்ட நிலையில் வெறும் சிரிப்பை வைத்து ரசிகர்களை சிரிக்க வைத்த ஒரே நடிகர் என்றால் அது குமாரி முத்து தான் என்று சொன்னால் அது மிகையாகாது.தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி, கமல் துவங்கி விஜய், அஜித் வரை பல்வேறு தலைமுறை நடிகர்களின் படத்தில் நடித்துள்ளார் குமரிமுத்து. இறுதியாக விஜய் நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ‘வில்லு’ படத்தில் நடித்திருந்தார் குமரிமுத்து. அதன் பின்னர் உடல் நலக்குறைவால் சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

This image has an empty alt attribute; its file name is 1-107.jpg

நடிகர் குமரிமுத்து தனது 75 வது வயதில் கடந்த பிப்ரவரி மாதம் 29 ஆம் தேதி காலமானர். மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குமரிமுத்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். குமரிமுத்துவின் மறைவிற்கு பல்வேறு திரைப்பட கலைஞர்களும் அஞ்சலி செலுத்தினர். அவரது கல்லறையில் கூட Its Time For The God, To Enjoy His Laughter அதாவது, இது கடவுளுக்கான நேரம், இவரது நகைச்சுவை அனுபவிக்க என்று எழுதப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement