‘குட்டி குட்டி டிரஸ் போட்டு நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா அக்கானு கேட்டேன்’ – ஷர்மிலியிடம் மனமுடைந்து சில்க் கூறியுள்ள பதில்.

0
2915
- Advertisement -

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் புகழின் உச்சத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா. காந்த கண்ணழகு, வசீகரமான மயக்கும் குரல், தனக்கென ஒரு வசீகரமான முகம் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர் நடிகை சில்க். இவருடைய இயற்பெயர் விஜயலஷ்மி. இவர் சினிமா துறையில் 1970களில் ஒப்பனைக் கலைஞராக தான் தன் வாழ்க்கையை தொடங்கினார். பின் தமிழ் நடிகர் வினுசக்கரவர்த்தியின் ‘வண்டிச்சக்கரம்’ என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு நடிகையாக சில்க் அறிமுகமானார். இந்த படத்தில் சில்க் என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்தார். இதனால் தான் இவருடைய பெயர் சில்க் ஸ்மிதா என்று மாறியது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து இவர் சினிமா திரை உலகில் 17 வருடம் பயணம் செய்தார். அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், அன்றைய காலகட்டத்தில் முன்னணி நடிகைகளாக இருந்த பல நடிகைகள் இவருடைய நடிப்பை கண்டு வியந்து பாராட்டி இருக்கிறார்கள். தற்போது படங்களில் ஐட்டம் சாங் வந்தாலும் எல்லோருக்கும் முதலில் நினைவு வருவது சில்க்ஸ் தான். அந்த காலகட்டத்தில் எக்கச்சக்க படங்களில் ஐட்டம் சாங் ஆடி இருக்கிறார். 90ஸ் தொடங்கி இன்று வரை ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் சில்க். அந்த அளவிற்கு ஒட்டுமொத்த உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். மேலும், இவரை தொடர்ந்து பல நடிகைகள் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள்.

- Advertisement -

நடிகை ஷர்மிலினியின் திரைப்பயணம்:

அதில் சிலர் மட்டும் தான் மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்து இருக்கிறார்கள். அந்த வகையில் கவர்ச்சி கதாபாத்திரங்களின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஷர்மிலி. இவர் இளம் வயதிலேயே குரூப் டான்ஸராக தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கினார். பின் இளவரசன், ஆவாரம்பூ உள்ளிட்ட பல படங்களில் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் சில காலம் படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்து வந்த சர்மிலி இடையில் என்ன ஆனார் என்று தெரியவில்லை. பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது தொலைக்காட்சிகளிலும் படங்களிலும் கிடைக்கும் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

சில்க் குறித்து நடிகை ஷர்மிலி அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் சர்மிலி பிரபல சேனலுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் நடிகை சில்க் ஸ்மிதா குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது, கவர்ச்சி ரோலில் நடிக்கும் போது வீட்டில் என்ன நினைப்பார்கள்? என்ற தயக்கம் எல்லா நடிகைகளுமே இருக்கும். எனக்கு மட்டுமில்லை எந்த பெண்ணுக்குமே கிளாமர் கதாபாத்திரத்தில் நடிக்க பிடிக்காது. சில்க் ஸ்மிதாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் அவரை அக்கா என்று தான் கூப்பிடுவேன். ஒரு முறை அவருடன் பேசிக்கொண்டு இருக்கும் போது இப்படி குட்டி குட்டி டிரஸ் போட்டு நடிக்க உங்களுக்கு கூச்சமா இல்லையா? அக்கா என்று கேட்டேன்.

-விளம்பரம்-

சில்க் அக்காவுக்கு ரொம்ப பிடித்தது:

அதற்கு அவர் எனக்கு மூடிட்டு நடிக்க தான் ஆசை. எவன்டி அப்படி நடிக்க கூப்பிடுகிறான் என்றார். அப்படி அவர் சொன்னது என்னை ரொம்ப பீல் பண்ண வைத்தது. அதுமட்டுமில்லாமல் அவர் சொல்லும் போது ரொம்ப மனமுடைந்து பீல் பண்ணி சொல்லி இருந்தார். சில்க் ஸ்மிதா அக்காவுக்கு பட்டுப்புடவை கட்டி நடிக்க அவ்வளவு ஆசை இருந்தது. ஷூட்டிங் இல்லாத போது அன்றைய நாள் முழுக்க பட்டு புடவை கட்டி தலை நிறைய பூ வைத்து நகைகள் அணிந்து வீட்டிலேயே இருப்பாராம். அதை அவர் சொன்ன போது எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது. அவர் அந்த மாதிரி இருப்பது பல பேருக்கு தெரியாது. சில படங்களில் அவர் சேலை கட்டி நடித்திருந்தாலும் கூட அதுவும் கவர்ச்சியாகத் தான் இருக்கும்.

சில்க் அக்கா சொன்ன அறிவுரை:

மேலும், அவர் மாதிரி அழகை பராமரிக்க கூடியவர்கள் ஹாலிவுட்டில் கூட இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு அழகை பராமரிப்பார். ஒரு தெலுங்கு பட சூட்டிங்கில் இருந்த போது அக்கா சாப்டீங்களா? என்றேன். அவர் 4 பாதம் பருப்பு சாப்பிட்டேன் என்றார். சாப்பாடு சாப்பிட்டுவிட்டு பாதாம் பருப்பு சாப்பிட்டீங்களா? என நான் கேட்டேன். இல்லை பாதாம் பருப்பு மட்டும் தான் சாப்பிட்டேன் என்றார். எனக்கு பயங்கர அதிர்ச்சியாக இருந்தது. நல்லா சாப்பிட்டு ரொம்ப நாள் ஆச்சு. அதிகம் சாப்பிட்ட வயிறு வச்சிருச்சு. அந்த காலத்திலேயே கோல்டு லிப்ஸ்டிக் போட்டவர் சில்க் அக்கா மட்டும் தான். ஃபேஷன் சம்பந்தமான நிறைய புக்ஸ் பார்த்துக் கொண்டே இருப்பார். என்னையும் உடலை பிட்டாக வைத்துக் கொள்ளும்படி அடிக்கடி அறிவுரை செய்வார் என்று சில்க் ஸ்மிதா குறித்து பல விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

Advertisement