நீச்சல் உடையில் போஸ் கொடுத்த துள்ளுவதோ இளமை நடிகை ஷெரின்.!

0
41916
Sherin
- Advertisement -

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான படம் துள்ளுவதோ இளமை. தனுஷ் 16 வயதில் நடித்த தன் முதல் படம் தான் இந்த படம். இந்த படத்தில் அவருக்கு நாயகியாக அந்த படத்தில் அறிமுகமானவர் ஷெரின். அப்படம் வெற்றியடைந்தாலும் ஷெரினுக்கு பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.

-விளம்பரம்-

ஆரம்பகாலத்தில் அவ்வப்போது கிடைத்த விளம்பர படங்களில் நடித்து வந்தார். துள்ளுவதோ இளமை திரைப்படத்திற்கு பின்னர் தமிழில் ஜெயா, விசில், உற்சாகம் போன்ற பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் முன்னணி நடிகையாக வளம் வர முடியாததால் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வந்தார் ஷெரின்.

இதையும் படியுங்க : பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் தொகுப்பாளினி.! வெளியான வைரல் புகைப்படம்.! 

- Advertisement -

அதன் பின்னர், வெளிமாநிலங்களுக்கு சென்று மற்ற மொழிப்படங்களில் நடிக்க முடிவு செய்து அங்கே சென்றும் சரியான பட வாய்ப்புகள் இல்லை. அதனால் தமிழ்நாட்டிற்கே திரும்பி வந்துவிட்டார் ஷெரின்.சற்று குண்டாகவும் மாறிவிட்ட அவர் அதனைக் குறைக்க ஆயுர்வேத மசாஜ் மூலம் தன்னை சின்ன இளமையான பெண் போல மாற்றிக்கொண்டார்.

இதுவரை தமிழ் தெலுங்கு, கன்னடம் என்று பல்வேறு மொழிகளில் நடித்த ஷெரின் இறுதியாக 2015 ஆம் ஆண்டு வெளியான நண்பேன்டா படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

தற்போது 33 வயதாகும் ஷெரின் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் நடிகை ஷெரின் நீச்சல் உடைகளில் போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement