பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த முதல் தொகுப்பாளினி.! வெளியான வைரல் புகைப்படம்.!

0
2325
Bigg-Boss-3
- Advertisement -

விஜய் டிவியில் இன்னும் சில ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். கடந்த இரண்டு வருடங்களை போலவே இந்த சீசனையும் உலக நாயகன் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சியின் இரண்டு ப்ரோமோ விடீயோக்கள் கூட வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-
Image result for priyanka deshpande

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களை பற்றிய விவரங்கள் சமூக வளைத்தளத்தில் கடந்த சில வாரங்களாக வைரலாக பரவி வருகிறது. அதில் ஓகே ஓகே பட புகழ் ஜாங்கிரி மதுமிதா மட்டும் கலந்துகொள்ளப்போவது உறுதியாகியுள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் மற்றுமொரு விஜய் டிவி பிரபலம் கலந்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்க : 46வது வயதில் இரண்டாம் திருமணம்.! விஜயகாந்த் பட நடிகையின் தற்போதைய நிலை.! 

- Advertisement -

இந்த நிலையில் விஜய் டிவியில் தொகுப்பிளானியாக பணியாற்றி வரும் பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக ஒரு செய்தி வைரலாக பரவி வருகிறது. இதற்கு முக்கிய காரணமே சமீபத்தில் பிக் பாஸ் வீட்டிற்குள் பிரியங்கா பிக் பாஸ் நாற்காலியில் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி இருக்கிறது.

View this post on Instagram

Bigboss chair ??? – Follow @priyanka_vijaytv_

A post shared by Priyanka (@priyanka_vijaytv) on

பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி என்றாலே அதில் விஜய் டிவி பிரபலங்கள் யாரேனும் ஒருவராவது கண்டிப்பாக பங்கு பெறுவார்கள் முதல் சீசனில் ஆர்த்தி, இரண்டாவது சீசனில் பாலாஜி, அனந்த வைத்தியந்தான் போன்ற விஜய் டிவி பிரபலங்கள் போட்டியாளராக கலந்து கொண்டனர். எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் யாரேனும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

-விளம்பரம்-

அது பிரியங்கா வாக இருக்கலாம் என்று இந்த புகைப்படத்தின் மூலம் வெளிப்படுகிறது. ஆனால், இந்த புகைப்படம் நிகழ்ச்சியின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்த விஜய் டிவி வெளியிட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. மேலும், பிரியங்காவின் ரசிகர்களும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்து கொள்வதையும் விரும்பவில்லை.

Advertisement