கொரோனாவிற்காக மீண்டும் நர்ஸாக மாறிய நடிகை. குவியும் பாராட்டு.

0
8524
sikha
- Advertisement -

கொரோனா வைரசினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. கொரோனா வைரசினால் இதுவரை உலக அளவில் 31 ஆயிரத்துக்கும் மேல் உயிரிழந்து உள்ளார்கள். இந்தியாவிலும் இந்நோய் தொற்று தீவிரம் அடையாமல் இருக்க பிரதமர் மோடி அவர்கள் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்றும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் சினிமா பிரபலங்களும், சமூக நல ஆர்வலர்களும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று பல்வேறு முன்னெச்சரிக்கை வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அரசாங்கத்திற்கு நடிகர்கள் கோடிக்கணக்கான அளவில் நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில் பாலிவுட் நடிகை ஷிகா மல்ஹோத்ரா அவர்கள் அரசு மருத்துவமனையில் செவிலியராக ஆர்வத்துடன் பணியாற்றி வருகிறார்.

- Advertisement -

தற்போது இவர் பணியாற்றும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. பாலிவூட்டில் நடிகை ஷிகா மல்ஹோத்ரா அவர்கள் சஞ்சய் மிஷ்ராவுடன் இணைந்து காஞ்ச்லி என்ற படத்தில் நடித்து உள்ளார். அதற்கு முன்பாகவே இவர் டெல்லி வர்த்தமான மகாவீரர் மருத்துவக் கல்லூரி மற்றும் சஃப்ர்தார்ஜுங் மருத்துவமனையில் 5 ஆண்டுகளாக செவிலியர் பட்டப்படிப்பு படித்துள்ளார்.

பின் இவர் நடிப்பிற்கு வந்தவுடன் நர்ஸ் பணியை விட்டு விட்டார். இந்நிலையில் இவர் கொரோனவா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு மும்பை அரசு மருத்துவமனையில் செவிலியராக தன்னார்வத்துடன் பணியாற்றி வருகிறார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

-விளம்பரம்-

அதில் அவர் கூறியிருப்பது, நான் அங்கீகரிக்கப்பட்ட பட்டம் பெற்ற செவிலியர் என்பது பலருக்கும் தெரியாது. நான் வர்தமன் மகாவீர் மருத்துவ மனையில் 5 ஆண்டுகள் செவிலியராக இருந்திருக்கிறேன். இந்தமுறை தேசத்திற்காக சேவை செய்ய முடிவெடுத்திருக்கிறேன். அதனால் மும்பையில் ஒரு மருத்துவமனையில் சேர்ந்து கொரோனா போராட்டத்திற்காக களம் இறங்கி இருக்கிறேன்.

ஒரு செவிலியராக இந்த தேசத்திற்கு உழைக்க உங்களது வாழ்த்துக்கள் எனக்கு தேவை. அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து அரசாங்கத்திற்கு ஆதரவு அளியுங்கள். என்னை ஆளாக்கிய என்னுடைய தாய்க்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் சேவையை பார்த்து பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை. இதனால் மக்கள் அனைவரும் பீதியில் உள்ளார்கள். இந்தியாவில் 979 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தற்போது இருக்கும் ஒரே மருந்து அனைவரும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது மட்டும் தான்.
மேலும், கொரோனா வைரஸை ஒழிக்க அரசாங்கம், காவல்துறை,மருத்துவர்கள் என அனைவரும் தங்கள் உயிரை பணய வைத்து போராடி வருகின்றனர்.

Advertisement