மாலத்தீவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி வரும் ஷில்பா ஷெட்டி – இவங்களுக்கு வயசாகவே ஆகாதா ?

0
692

பொதுவாக மற்ற சினிமா துறைகளை விட பாலிவுட் நடிகர் நடிகைகள் தங்களது அழகிற்கு முக்கியத்துவம் அளிப்பார்கள்.குறிப்பாக தங்களது உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சிகளை செய்வார்கள்.அந்த வரிசையில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் ஒருவர்.பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஷில்பா செட்டி. இவர் இந்தியில் உள்ள பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஷில்பா செட்டி பரிச்சயமானார்.

அதோடு தளபதி விஜய் உடன் குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பின்னர் மோதி விளையாடு படத்திலும் ஷில்பா செட்டி நடித்திருந்தார். இவர் 2009ம் ஆண்டு தொழிலதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கும் பின்னரும் தொடர்ந்து நடித்து வரும் ஷில்பா ஷெட்டி, இந்த வயதிலும் உடல் அமைப்பை கட்டுக்கோப்பாக வைத்து வருகிறார்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் மாலத்தீவில் எடுத்துக்கொண்ட நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசி இருக்கிறார். இதை பார்த்த பலரும் உண்மையில் இவங்களுக்கு 45 வயதா என்று வியப்படைந்து உள்ளார்கள். 2012ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததாக தகவல் சோசியல் மீடியாவில் வெளியானது.இந்த குழந்தையை நடிகை சில்பா செட்டி அவர்கள் வாடகை தாய் மூலம் பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து கூறிய அவர் என்னுடைய மகனுக்கு சகோதரர் துணை வேண்டும் என்று நினைத்து தான் இன்னொரு குழந்தை பெற்று எடுக்க முடிவு செய்தோம். அதற்காக நான் குழந்தை பெற்றுக் கொள்ள தயாரானேன். அப்போது இரு முறை நான் கருவுற்றேன்.ஆனால், எனக்கு இருந்த உடல் குறைபாட்டினால் கரு வளராமல் சிதைத்தது. பின்னர் குழந்தை ஒன்றை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்று நினைத்தோம். அதுவும் சில காரணங்களால் நடக்க முடியாமல் போனது. இதை அடுத்து நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் தான் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு எடுத்தேன் என்று கூறியிருந்தார்.

-விளம்பரம்-
Advertisement