தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரன். ஒரு காலத்தில் இவர் ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர். இவர் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என பல மொழி படங்களில் நடித்து பட்டையை கிளப்பியவர். நடிகை ஸ்ரேயா அவர்கள் கடைசியாக சிம்புவுடன் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் தான் நடித்திருந்தார். அதற்கு பிறகு இவருக்கு படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்ததால் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். பின் 2018 ஆம் ஆண்டு நடிகை ஸ்ரேயா அவர்கள் உருசியாவை சேர்ந்த தொழிலதிபரும், டென்னிஸ் வீரருமான ஆன்ட்ரி கொஸ்சீவை திருமணம் செய்து கொண்டார்.
நடிகை ஷ்ரேயா தற்போது தெலுங்கில் இரண்டு படத்திலும், தமிழில் அரவிந்த் சாமி நடித்து வரும் ‘நரகாசரன் ‘ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரேயா அவர்கள் நடித்து வரும் சண்டக்காரி படத்தின் நடன காட்சி பிரம்மாண்ட அளவில் எடுக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள படம் மை பாஸ். இந்த படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்தில் திலீப், மம்தா மோகன்தாஸ் நடித்திருந்தார்கள். இந்த படத்தை தான் தற்போது “சண்டக்காரி” என்ற பெயரில் தமிழில் ரீமேக் செய்து வருகிறார்கள். இந்த படத்தின் இயக்குனர் ஆர்.மாதேஷ் ஆவார்.
இந்த படத்தில் திலீப் கதாபாத்திரத்தில் நடிகர் விமலும், மம்தா மோகன்தாஸ் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரேயாவும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தின் கதை லண்டனில் நடப்பதால் படத்தின் முழு படப்பிடிப்பும் அங்கு தான் நடந்து வருகிறது. இந்த படத்தில் நடிகை ஸ்ரேயா அவர்கள் சாப்ட்வேர் நிறுவனத்தின் அதிகாரியாக நடிக்கிறார். அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர் தான் விமல். இந்த படத்திற்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். அம்ரிஷ் இசை அமைக்கிறார். பாஸ் புரொடக்ஷன்ஸ் கார்ப்பரேசன் மற்றும் மெட்ரோ நெட் மல்டிமீடியா பட நிறுவனங்கள் இணைந்து J.ஜெயகுமார் இந்த படத்தை தயாரிக்கிறார்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு போது பாதுகாப்பு மிகுந்த குடியிருப்பு பகுதியை நடிகை ஸ்ரேயா அவர்கள் தாண்டி சென்றதால் போலீசார் துப்பாக்கியுடன் ஸ்ரேயாவை சுற்றி சூழ்ந்த சம்பவம் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படத்திற்காக லண்டனில் பிஸியான ஏரியாவான வாட்போர்ட் பகுதியில் மிகப்பெரிய நடன அரங்கு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த மேடையில் தான் நடன காட்சிகள் படமாக்கப்பட்டது. லண்டன் அழகிகளுடன் சேர்ந்து நடிகை ஸ்ரேயா கவர்ச்சி நடனம் ஆடினார். தற்போது இவர் நடனமாடும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 200 துணை நடிகர்கள், 100 நடன கலைஞர்களுடன், விமல், சத்யன், புன்னகை பூ கீதா என பல நடச்சத்திர பட்டாளம் கலந்து கொண்டு நடனம் ஆடினார்கள்.