சிம்ரனின் தங்கை மோனலை தெரியும், அவரது சகோதரரை பார்த்துள்ளீர்களா. சிம்ரன் பதிவிட்ட புகைப்படம்.

0
16964
simran
- Advertisement -

தமிழ் சினிமாவின் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர்.

-விளம்பரம்-
imran brother sumith

- Advertisement -

தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது. திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார்.

இதையும் பாருங்க : பார்வை ஒன்றே போதுமே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இன்று சாலையோரத்தில்

-விளம்பரம்-

இவரது தங்கையான மோனல் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பார்வை ஒன்றே போதுமே ” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். படங்களில் ஒரு சில படங்களில் நடித்த மோனல் கடந்த 2002 தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மோனல், நடிகர் குணாலை காதலித்து பின்னர் அவரால் தான் தற்கொலை செய்து கொண்டார் என்று தான் இதுவரை பேசப்பட்டு வருகிறது.ஆனால், நடிகை மோனலின் தற்கொலை பின்னணியில் காதல் தோல்வி தான் என்று கூறப்பட்டது.

மேலும், சிம்ரனுக்கு தங்கை இருப்பது தெரியும். ஆனால், அவருக்கு ஒரு சகோதரரும் இருக்கிறார். அவருடைய பெயர் சுமித் நாவால். சமீபத்தில் தனது சகோதரருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த பதிவை கண்ட ரசிகர் ஒருவர், உங்கள் சகோதரர் படத்தில் நடித்துள்ளாரா என்று கேட்டிருந்தார். அதற்கு சிம்ரன் ‘ஆம்’ என்று பதில் அளித்துள்ளார். சுமித் நாவால் மலையாளத்தில் பிக் பி, CIA போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Advertisement