தமிழ் சினிமாவின் 90ஸ் கால கட்டத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களயும் தனது எடுப்பசையில் வசியம் செய்து வைத்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார்.
Teaching value of teachers and parents to your child is our responsibility,it must start from the time a child is born,lets not take this lightly.start talking action right away. pic.twitter.com/4wuJ6GuKXf
— Simran (@SimranbaggaOffc) September 24, 2018
கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடன் கைகோர்த்து நடித்துவிட்ட நடிகை சிம்ரன் தற்போது தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார்.
திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் நடிகை சிம்ரன் தற்போது துருவ நட்சத்திரம், சீமராஜா, ரஜினி 165 போன்ற படங்களில் ரீ- என்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சிம்ரன் ட்விட்டர் பக்கத்தில் தனது சிறு வயது புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பதிவில் குழந்தைகளுக்கு ஆசிரியர்களின் முக்கியத்துவத்தை பற்றி உணர்த்துவது பெற்றோர்களின் கடமை. ஒரு குழந்தை பிறந்த தருணத்தில் இருந்து இதனை பெற்றோர்கள் செய்ய வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் நடிகை சிம்ரன். ஆனால், இந்த பதிவிற்கு எதற்காக தனது குழந்தை பருவ புகைப்படத்தை பதிவிட்டார் என்று தான் தெரியவில்லை.