மீரா மிதுன் பார்ட் 2 – ஆண் நபருடன் நடனமாடிய சிம்ரனின் வீடீயோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்.

0
16581
simran-Meera
- Advertisement -

பொதுவாக சினிமாவில் ஹீரோக்களுக்கு தான் பட்டப்பெயர் இருக்கும் ஆனால் ஒரு சில நடிகைகளுக்கு மட்டுமே பட்ட பெயர் இருந்திருக்கிறது. அந்த வகையில் இடுப்பழகி என்ற பட்டத்துடன் 90ஸ் காலகட்டத்தில் முன்னனி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை சிம்ரன். தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர்களான விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல்வேறு முன்னனி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்துவிட்ட சிம்ரன், தமிழ் சினிமாவையும் தாண்டி தென்னிந்திய சினிமாவிலும் கொடி கட்டி பறந்து வந்தார் சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான்.

-விளம்பரம்-

இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் நடித்த பல்வேறு படங்களுக்கு இவரது சிறப்பான நடிப்பில் இவருக்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது. சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகை, சிறந்த வில்லி கதாபாத்திரம் என்று நடிகை சிம்ரன் ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். சிம்ரன் கடந்த 2003 ஆம் ஆண்டு சதீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் காதல் திருமணம் என்றும் கூறப்பட்டது.

- Advertisement -

இதையும் பாருங்க : சமையல் செய்ற அக்காவுக்கு மட்டும் மாதம் இவ்வளவு தருகிறோம் – புலம்பும் மணிமேகலை.

திருமணத்திற்கு பின்னர் இவருக்கு 2 ஆண் குழந்தைகளும் பிறந்தனர். திருமணம் முடிந்து குழந்தை குட்டி என்று செட்டில் ஆன பின்னரும் தனது நடிப்பை கைவிடாமல் இருந்து வந்தார். மேலும், தனது செகண்ட் இன்னிங்ஸ்ஸை தொடர்ந்த சிம்ரன் தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக பங்குபெற்று வருகிறார். அத்தோடு சினிமாவில் நடிப்பதையும் நிறுத்தாமல் நடித்து வருகிறார். இறுதியாக சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘பேட்ட’ படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் தனது இளமை தோற்றத்தை இழக்காமல் இருந்து வந்தார் சிம்ரன்.

-விளம்பரம்-

பேட்ட படத்தை தொடர்ந்து பல்வேறு பட வாய்ப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும் நடித்துள்ளார் சிம்ரன். தற்போது 43 வயதை கடந்துள்ள சிம்ரன் நடன இயக்குனர் ஒருவருடன் நெருக்கமாக நடனமாடிய வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர் ஒருவர் மீராமிதுன் பார்ட் 2 என்று கமென்டை பதிவிட்டுள்ளார். இந்த கமெண்ட் இருக்கும் முக்கிய காரணமே மீராமிதுன் தான் அடிக்கடி ஆண் நண்பர்களுடன் இப்படி நெருக்கமாக நடனமாடி வீடியோக்களை பதிவு இடுவார் ஆனால் தற்போது சிம்ரனும் இதுபோல வீடியோவை பதிவிட்டுள்ளார்

Advertisement