சன் மியூசிக்கில் பிரபலமான வி.ஜே வாக இருந்தவர் மணிமேகலை. பின்னர் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பானியாகவும் அறிமுகம் ஆனார். பின் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மணிமேகலை மக்களிடையே பிரபலமான தொகுப்பாளினியாக ஆனார். அதுமட்டும் இல்லாமல் இவருக்கென தனி ரசிகர் கூட்டமும் உள்ளது. மணிமேகலை அவர்கள் உசேன் என்பவரை காதலித்து வந்தார்.
மணிமேகலை பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களுடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். பின் இவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்து திருமணம் செய்து கொண்டார்கள். ஹுஷைன், மணிமேகலை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்கள் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள். மணிமேகலை திருமணத்திற்குப் பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார்.மேலும், இன்னும் தனது பெற்றோர்கள் தங்களை ஏற்றுக்கொள்ளாததால் கொஞ்சம் கவலையில் இருக்கிறார் மணிமேகலை.
இதையும் பாருங்க : மற்ற நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு உடல் எடை குறைத்து மாறிப் போன பிரசாந்த்.
இடையில் கொஞ்சம் சின்னத்திரையில் பிரேக் எடுத்துக்கொண்ட மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘மிஸ்டர் அண்ட் மிர்சஸ் சின்னத்திரை ‘ நிகழ்ச்சியில் பங்குபெற்றார். மேலும், சமீபத்தில் நிறைவடைந்த குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்குபெற்றார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்று உள்ள மணிமேகலை தனது பர்சனல் வாழ்க்கை குறித்தும் தனது கணவர் குறித்தும் குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்றது குறித்தும் பேசியுள்ளார்.
வீடியோவில் 4 :15 நிமிடத்தில் பாராகவும்
அதில் , எல்லாரும் கேக்கறாங்க வீட்டில் யார் தான் சமைக்கிறேன் என்று உண்மையாவே வீட்டில் நானும் சமைப்பதில்லை அவனும் சமைப்பதில்லை ஒரு அக்காதான் வந்து வீட்டில் சமைத்து கொடுக்கிறார்.இதற்காக மாதாமாதம் ஒரு ஐயாயிரம் ரூபாய் செலவாகிறது.இதனால் பட்ஜெட்டில் நிறைய தூண்டிவிழுகிறது விரைவில் நான் எப்படியாவது சமைக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார் மணிமேகலை