அந்த நடிகையே என்னிடம் மன்னிப்பு கேட்டார் – டப்பா ரோல் சர்ச்சை பற்றி உண்மையை உடைத்த நடிகை சிம்ரன்

0
110
- Advertisement -

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சிம்ரன். இவர் முன்னனி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், விக்ரம், சூர்யா என்று பல நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து இருக்கிறார். சிம்ரன் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது அவரது நடனம் தான். இதனால் சிம்ரனை பலரும் இடுப்பழகி என்று அழைத்து வந்தனர். தமிழில் முன்னணி நடிகையாக இருந்த சிம்ரன் சமீப காலமாக குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவரது சிறப்பான நடிப்பிற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.

-விளம்பரம்-

அந்த வகையில் தற்போது சிம்ரன் அவர்கள் டூரிஸ்ட் பேமிலி என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார், யோகி பாபு, ரமேஷ் திலக், இளங்கோ குமரவேல், மீதுன் ஜெய்சங்கர், கமலேஷ் உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். இலங்கை தமிழர் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியாகியிருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த படம் நல்ல வசூல் செய்து வருவதாக கூறப்படுகிறது.

- Advertisement -

சிம்ரன் சொன்னது:

மேலும், இந்த படத்தில் சிம்ரன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் அஜித்தின் நடிப்பில் வெளியாகியிருந்த குட் பேட் அக்லி படத்திலும் ஒரு கேமியா ரோலில் சிம்ரன் நடித்திருந்தார். தற்போது சிம்ரன் நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் ஒரு விருது நிகழ்ச்சியில் சிம்ரன், நான் ஒரு படம் பார்த்தேன். அந்த படத்தில் நடித்திருந்த நடிகையினுடைய கதாபாத்திரம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதனால் அவருக்கு மெசேஜ் செய்தேன். அதில், நான் படம் பார்த்தேன். எனக்கு சப்ரைஸ் ஆக இருந்தது. நீங்கள் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க என்ன காரணம்? என்று கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தேன்.

ஜோதிகா-சிம்ரன் விவகாரம்:

அதற்கு அந்த நடிகை, உங்களைப் போன்ற ஆண்டி கதாபரங்களில் நடிப்பதற்கு இது எவ்வளவோ மேல் என்று பதில் சொல்லினார். அது எனக்கு ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது. நான் அந்த பதிலை எதிர்பார்க்கவே இல்லை. பின் நான், உங்களைப் போன்ற டப்பா ரோலில் நடிப்பதற்கு ஆன்ட்டி ரோல் எவ்வளவோ மேல் என்று சொன்னேன். இப்படி சிம்ரன் பேசிய வீடியோ இணையத்தில் மிக வைரலாகி இருந்தது. அதோடு சிம்ரன் சொன்ன நடிகை ஜோதிகா தான் என்றெல்லாம் சோசியல் மீடியாவில் சொல்லி வந்தார்கள். காரணம், சமீபத்தில் ஜோதிகா நடிப்பில் டப்பா கார்டெல் என்ற வெப் சீரிஸ் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சிம்ரன் பேட்டி:

இந்நிலையில் இது தொடர்பாக அளித்த பேட்டியில் நடிகை சிம்ரன், இங்கு எத்தனையோ வெப் சீரிஸ்கள் வருகிறது. அதில் டப்பா கார்டெல் நல்ல வெப்சீரிஸ் என்று நினைக்கிறேன். நான் இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லை. நான் அப்போது திட்டமிட்டு எதுவும் பேசவில்லை. அது உண்மையிலேயே எனக்கு நடந்தது. நான் மற்றவர்களை பற்றி வெளியில் பேசுவது கிடையாது. என் நண்பர்களும் என் பக்குவத்துக்கு ஏற்றார் போலவே நடந்து கொள்வார்கள். என் மனதில் இருக்கும் எண்ணத்தை பேசுவதற்கு நான் அந்த மேடையை பயன்படுத்திக் கொண்டேன்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி:

நான் எப்போதும் எனது உலகத்தில் இருக்க விரும்பவேன். அந்த நடிகை பேசியது என்னை ரொம்பவே காயப்படுத்தியது. அதனால்தான் நான் அன்று ஆழ்மனதிலிருந்து பேசி விட்டேன். அந்த நடிகை அவருடைய கருத்தை சொல்கிறார் என்பதை நான் புரிந்து கொள்கிறேன். ஆனால், அவர் சொன்ன வார்த்தைகள் தான் என்னை ரொம்ப காயப்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு பிறகு அந்த நடிகையையுமே என்னிடம் மன்னிப்பு கேட்டு மெசேஜ் அனுப்பி இருந்தார். அவருமே என்னை காயப்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை என்று கூறி இருக்கிறார்.

Advertisement