வெறும் தலையணை வைத்து மறைத்துக்கொண்டு போஸ். இது தான் புதிய சேலஞ்ஜாம்.

0
23763
payal
- Advertisement -

2017-ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில் வெளி வந்த படம் ‘சன்னா மெரேயா’. இந்த படத்தினை இயக்குநர் பங்கஜ் பத்ரா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக நிஞ்சா என்பவர் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக நடிகை பாயல் ராஜ்புட் நடித்திருந்தார். இது தான் பாயல் ராஜ்புட் ஹீரோயினாக அறிமுகமான முதல் திரைப்படமாம். இப்படம் மராத்தி மொழியில் மெகா ஹிட்டான ‘சைரத்’ என்ற படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து ஹிந்தியில் ‘வீரே கி வெட்டிங்’ என்ற படத்தில் நடித்தார் நடிகை பாயல் ராஜ்புட். அதன் பிறகு பஞ்சாபி மற்றும் ஹிந்தி திரையுலகுடன் தனது திரை பயணம் நின்று விடக் கூடாது என்று நினைத்த நடிகை பாயல் ராஜ்புட், தெலுங்கு திரையுலகில் நுழையலாம் என்று முடிவெடுத்தார். 2018-ஆம் ஆண்டு வெளி வந்த தெலுங்கு படம் ‘RX 100’.

- Advertisement -

இந்த படத்தின் மூலமாக தான் நடிகை பாயல் ராஜ்புட் தெலுங்கு திரையுலகில் என்ட்ரியானார். இந்த படத்தினை இயக்குநர் அஜய் பூபதி இயக்கியிருந்தார். இதில் கதையின் நாயகனாக கார்த்திகேயா நடித்திருந்தார். இப்படம் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. அதோடு, நடிகை பாயல் ராஜ்புட்டிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது.

‘RX 100′ படத்தின் ஹிட்டிற்கு பிறகு தெலுங்கில் ‘என்.டி.ஆர் : கதாநாயகுடு, சீதா, RDX லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா’ என அடுத்தடுத்து பல பிரபல நடிகர்களின் படங்கள் நடிகை பாயல் ராஜ்புட்டின் கால்ஷீட் டைரியில் குவிய ஆரம்பித்து விட்டது. தற்போது, ‘கொரோனா’ எனும் வைரஸ் தீயாய் பரவி வருவதால், ‘144’ போடப்பட்டுள்ளது. திரையுலகில் அனைத்து படங்களின் ஷூட்டிங்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இந்நிலையில், நடிகை பாயல் ராஜ்புட் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு, பில்லோ சேலஞ்ச் (#PillowChallenge) என்ற ஹேஸ் டேக்குடன் ஸ்டேட்டஸ் போட்டிருக்கிறார். நடிகை பாயல் ராஜ்புட் பில்லோவை உடையாக அணிந்து போஸ் கொடுத்திருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது. விரைவில் ‘ஏஞ்சல்’ என்ற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிலும் கால் பதிக்கவுள்ளாராம் பாயல் ராஜ்புட். இதில் ஹீரோவாக உதயநிதி ஸ்டாலின் நடித்து கொண்டிருக்கிறார்.

Advertisement