மாலத்தீவில் நீச்சல் உடை புகைப்படங்களை அள்ளி வீசிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்.

0
1666
Jhanvi-Kapoor
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் திரைப்படத் துறையில் மிகப் புகழ் பெற்ற நடிகை என்று சொல்லலாம். இவர் 1969 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு வரை சினிமா உலகில் பயணத்தார். இவர் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படங்களில் நடித்து உள்ளார். நடிகை ஸ்ரீ தேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழி திரைப் படங்களிலும் நடித்து உள்ளார். இதுவரை இவர் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் கலை துறையில் ஆற்றிய பணிக்காக பல்வேறு விருதுகளை வாங்கி உள்ளார். பின் நடிகை ஸ்ரீ தேவி அவர்கள் பாலிவூட்டில் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார்.

-விளம்பரம்-

இவர்களுக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். நடிகை ஸ்ரீதேவி அவர்கள் சிவகாசியில் பிறந்து வளர்ந்தாலும் பாலிவுட்டில் கொடிகட்டி பறந்தார். இவர் பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகையாக உயர்ந்து பின் அங்கேயே செட்டிலாகிவிட்டார். இவர் திடீரென்று மாரடைப்பால் இறந்து விட்டார். இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இவரைப் போலவே இவருடைய மகள் ஜான்வி கபூரும் பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

- Advertisement -

தற்போது குஞ்சன் சக்சேனா, ரூஹி அஃப்ஜா, தோஸ்தானா 2 ஆகிய திரைப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இதனுடன் நெட்ஃப்ளிக்ஸ் திரைப் படமான ‘கோஸ்ட் ஸ்டோரிஸ்’ நெட்ஃப்ளிக்ஸ் படத்திலும் ஜான்வி நடித்து வருகிறார் என்று தெரிய வந்து உள்ளது.மேலும், தன் அம்மா ஸ்ரீதேவியை வளர்த்து விட்ட தமிழ் சினிமாவுக்கும், தெலுங்கு சினிமாவுக்கும் கூடிய விரைவில் வரப்போவதாகக் கூறியிருந்தார்.

இந்நிலையில் தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி பட ஹீரோ விஜய் தேவர்கொண்டா படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஜான்விடம் பேச்சு வார்த்தைகள் நடத்தினார்கள். ஆனால், ஜான்வி கபூர் நடிக்கவில்லை என்று மறுத்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement