சுவிட்சர்லாந்தில் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாடிய விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி – அட, இவருக்கு இவ்ளோ பெரிய மகளா ?

0
1181
sridevi
- Advertisement -

சுவிட்சர்லாந்தில் ஸ்ரீதேவி விஜயகுமார் தன்னுடைய மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். 1961 இல் வெளிவந்த ஸ்ரீ வள்ளி என்ற திரைப்படத்தில் முருகனாக குழந்தை நட்சத்திரமாக நடித்து தன்னுடைய பயணத்தைத் தொடங்கினார் விஜயகுமார்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து தற்போது வரை இவர் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார். தற்போது விஜயகுமார் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் பாருங்க : பிரேமம் பட நடிகையுடன் காரில் சென்ற நடிகரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய மனைவி. இதோ வீடியோ.

விஜயகுமார் குடும்பம்:

இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976 யில் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமாரின் முதல் மனைவியான முத்துக்கனுக்கு பிறந்தவர் தான் அருண் விஜய், அனிதா, கவிதா. மேலும், மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வந்தார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

-விளம்பரம்-

விஜயகுமார் நடித்த படம்:

இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு வருகிறார். அதுமட்டும் இல்லாமல் விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள். சமீபத்தில் விஜயகுமார், விஜயகுமாரின் மகன் அருண் விஜய், விஜயகுமாரின் பேரன் ஆகிய மூன்று பேருமே சேர்ந்து நடித்திருந்த படம் ஓ மை டாக் . இந்த படம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது.

ஸ்ரீதேவி விஜயகுமார்:

இந்நிலையில் ஸ்ரீதேவி விஜயகுமார் தன் மகளின் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. நடிகை ஸ்ரீதேவின் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். பின் காதல் வைரஸ் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின் இவர் சில படங்களில் நடித்து இருந்தார். பிறகு இவருக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் திருமணம் நடந்தது.

ஸ்ரீதேவி மகள் பிறந்தநாள்:

இவருக்கு ரூபிகா என்ற மகளும் இருக்கிறார். இவரது மகளும் மஞ்சுளாவை போல முக ஜாடையை தான் கொண்டுள்ளார். வருடம் வருடம் ஸ்ரீதேவி தன்னுடைய மகளின் பிறந்தநாளை சோசியல் மீடியாவில் வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தன்னுடைய மகளின் 6-வது பிறந்தநாளை ஸ்ரீதேவி கொண்டாடியிருக்கிறார். மேலும், ஸ்ரீதேவி தன் கணவருடன் மகளின் 6-வது பிறந்தநாளை சுவிட்சர்லாந்தில் கொண்டாடியிருக்கிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement