பிரேமம் பட நடிகையுடன் காரில் சென்ற நடிகரை வழிமறித்து சரமாரியாக தாக்கிய மனைவி. இதோ வீடியோ.

0
574
- Advertisement -

ஒடிசாவில் பிரேமம் பட நடிகையுடன் காரில் சென்ற நடிகரை வழிமறித்து சரமாரியாக அவருடைய மனைவி தாக்கியிருக்கும் சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களையும் கவர்ந்த படம் பிரேமம். இந்த படம் 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் தான் வெளிவந்தது. ஆனால், தென்னிந்திய ரசிகர்களால் பிரேமம் படத்தை இன்னும் கூட மறக்க முடியாது.

-விளம்பரம்-

இந்த படத்தை அல்போன்ஸ் புத்திரன் இயக்கி இருந்தார். இந்த படத்தில் நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டின், அனுபமா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். மேலும், பிரேமம் படம் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் மொழி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இன்னும் அந்த படத்தின் நினைவுகள் ரசிகர்கள் மனதிலேயே நிற்கிறது என்று சொல்லலாம்.

- Advertisement -

இந்த படம் தமிழில் சேரன் இயக்கத்தில் வந்த ஆட்டோகிராப், மற்றும் ஜெயம் ரவியின் தீபாவளி படமும் கலந்த கலவையாக தான் இருந்தது என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் மூன்று நாயகிகள் இருந்தார்கள். மேலும், இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பலர் தற்போது தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்கள் திகழ்கிறார்கள். நிவின்பாலி தொடங்கி சாய்பல்லவி, அனுபமா என பலரும் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

அதிலும் மலர் டீச்சர் என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் சாய்பல்லவி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும், இந்த படம் பல மொழிகளில் வெளியாகி இருந்தது. அந்த வகையில் ஒடிசா மொழியிலும் ப்ரேமம் படம் வெளியாகி இருந்தது. ஒடிசா மொழி பிரேமம் படத்தில் நடித்தவர்கள் பாபுஷான் மொஹந்தி, ப்ரக்ருதி மிஸ்ரா. இவர்கள் இருவரும் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக காரில் சென்று கொண்டிருந்தார்கள்.

-விளம்பரம்-

அப்போது திடீரென பாபுஷான் மொஹந்தியின் மனைவி காரை வழிமறித்து இருக்கிறார். பின் அவர் காருக்குள் இருந்த இருவரையும் சரமாரியாக தாக்கி இருக்கிறார். ஆனால், நடிகை ப்ரக்ருதி எப்படியோ தப்பித்து ஆட்டோவில் ஏறி ஓடியிருக்கிறார். இதனை அடுத்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறது.

Advertisement