இவ்ளோ நாளா குகைல இருந்தீங்களா ? இப்போ தான் போன் password ஞாகபம் வந்துச்சா – ஸ்ரீதிவ்யாவின் comeback போஸ்ட்டை கண்டு ரசிகர்கள் கேள்வி.

0
945
Sridivya
- Advertisement -

நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஸ்ரீதிவ்யா பதிவிட்டு இருக்கும் புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் பலரும் கமெண்டுகளை அள்ளி வீசி வருகின்றனர். தமிழ் ,சினிமாவில் ஹோம்லியான லுக் இருந்தும் நிலைத்து நிற்க முடியாமல் இருக்கும் பல நடிகைகளில் நடிகை ஸ்ரீதிவ்யாவும் ஒருவர். நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம்.

-விளம்பரம்-

இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார்.

- Advertisement -

மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் தான் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் என்பவர் இயக்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், ஸ்ரீதிவ்யா, சூரி உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தனர். அதுமட்டுமில்லாமல் நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து இருந்தார்.

இந்த படத்திற்கு பிறகு தான் பல இடங்களில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற சங்கங்களை இளைஞர்கள் புதிதாக துவக்கினார்கள் என்று கூட சொல்லலாம். அதன் பின்னர் இவர் ஜீவா, காஸ்மோரா, காக்கி சட்டை போன்ற பல்வேறு படங்களில் நடித்து வந்தார். ஆனால், இவருக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், இருக்கு அதன் பின்னர் டாப் ஹீரோக்களின் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் வரிசையாக பட வாய்ப்புகளும் வரவில்லை.

-விளம்பரம்-

இறுதியாக இவர் ஜீவா நடிப்பில் வெளியான சங்கிலி புங்களி கதவ தோற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்திற்கு பின்னர் இவரை வேறு எந்த படத்திலும் காண முடியவில்லை. கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளாக இவர் வாய்ப்பில்லாமல் தான் இருந்து வருகிறார். இறுதியாக மலையாளத்தில் வெளியான பிரித்திவிராஜுன் ஜன கன மன படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

நடிகைகளை பொறுத்த வரை வாய்ப்புகள் இல்லை என்றாலும் ரசிகர்கள் தங்கள் முகத்தை மறந்துவிடக்கூடாது என்பதற்க்காக சமூக வலைதளத்தில் ஆவது அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார்கள். ஆனால், ஸ்ரீ திவ்யா தங்களுடைய சமூக வலைதளத்தில் கூட கடந்த சில மாதங்களாக எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்து வந்தார். இப்படி ஒரு நிலையில் நீண்ட இன வேலைக்கு பின்னர் தன்னுடைய செல்பி புகைப்படம் ஒன்றை பதிவிட்டு இருக்கிறார் ஸ்ரீதிவ்யா. இதனை கண்ட ரசிகர்கள் பலரும் இப்பதான் போன் பாஸ்வேர்ட் ஞாபகம் வந்ததா என்று கலாய்த்து கமெண்ட் போட அதற்கு ஸ்ரீதிவ்யாவும் ரியாக்ட் செய்திருக்கிறார். மேலும்,சிலரோ 5 வருசமா குகைல இருந்தீர்களா என்று கமன்ட் செய்ய அதற்கு ஸ்ரீதிவ்யா ‘கிட்டத்தட்ட’ என்று பதில் அளித்துள்ளார்.

Advertisement