மின்னும் மேனி, மாடர்ன் உடை. ஆளே மாறியுள்ள நடிகை ஸ்ரீதிவ்யாவின் லேட்டஸ்ட் புகைப்படம்.

0
61481
sridivya
- Advertisement -

தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதிவ்யா. நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகை ஆவார். ஸ்ரீதிவ்யா ஹைதராபாத்தில் பிறந்தவர். அதுமட்டுமில்லாமல் ஸ்ரீதிவ்யா அவர்கள் மூன்று வயதிலேயே தன் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினார் என்றும் சொல்லலாம். இவர் பத்து தெலுங்கு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் தெலுங்கு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். மேலும், 2010 ஆம் ஆண்டு தான் இவர் ‘மனசார’ எனும் தெலுங்கு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.

-விளம்பரம்-

பின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமா திரை உலகில் அறிமுகமானார். பின் இவர் தமிழில் பென்சில், ஈட்டி, காக்கி சட்டை, வெள்ளைக்கார துரை, மருது என பல படங்களில் நடித்துள்ளார். மேலும்,2013 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படமான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தார் ஸ்ரீதிவ்யா.

இதையும் பாருங்க : ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்துகொண்டுள்ளேன். கடுப்பில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்ட ஸ்ருதி ஹாசன்.

- Advertisement -

‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் சொன்னாலே அனைவரும் குஷி ஆகி விடுவார்கள். மேலும்,நடிகை ஸ்ரீதிவ்யா அவர்கள் இந்த படத்தின் மூலம் இளைஞர்களின் கனவு கன்னியாகவும் திகழ்ந்தார் என்று கூட சொல்லலாம். தற்போது கூட ‘ஊதா கலரு ரிப்பன்’ பாடல் எங்கு ஒலித்தாலும் அனைவருக்கும் ஞாபகம் வருவது ஸ்ரீதிவ்யா தான் அந்த அளவிற்கு மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளார். பார்ப்பதற்கு சின்னப்பெண் போல தோற்றம் இருப்பதால் இவருக்கு மாஸ் நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு தற்போதும் கிடைக்கவில்லை.

மேலும் இப்போது அம்மணிக்கு சொல்லிக்கொள்ளும்படியான பட வாய்ப்புகளும் இல்லை இதனால் கடந்த சில காலமாக உடற்பயிற்சிகளை செய்து வருகிறார் அவரது புகைப்படங்களை பதிவிட வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் மாடர்ன் உடையில் இருக்கும் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஸ்ரீதிவ்யா. அதில் முன்பைவிட கொஞ்சம் மினுக்கும் மேனியுடன் படு மாடர்னாக காட்சியளிக்கிறார் ஸ்ரீதிவ்யா.

-விளம்பரம்-
Advertisement